Wednesday, April 29
Shadow

கவலைவேண்டாம் – திரைவிமர்சனம் மகிழ்ச்சி (5/3.5)

ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த நாளிலேயே இருவரும் கருத்து வேறுபட்டு பிரிந்து போகிறார்கள். பின்னர், சில காலம் கழிந்த நிலையில், ஜீவா சொந்தமாக ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கிறார்.

அதேசமயம் காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. மறுமுனையில் ஜீவாவை சுனைனா ஒருதலையாக காதலித்து வருகிறார். ஜீவாவுக்கோ காஜல் அகர்வாலுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

இந்த நிலையில், பாபி சிம்ஹாவை திருமணம் செய்துகொள்வதற்காக ஜீவாவை முறைப்படி விவாகரத்து செய்ய காஜல் அகர்வால் முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க செல்கிறார். அப்போது, ஜீவா தன்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்து, தன்னுடைய சொல்படி நடந்தால் அவள் கேட்டபடி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக சொல்கிறார்.

இதையடுத்து, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஜீவா, சுனைனா மற்றும் அவரவர்களுடைய நண்பர்கள், தோழிகள் பெரிய பட்டாளமே ஒரே வீட்டில் தங்குகிறது. இந்த கலகலப்பான காலகட்டத்தின் இறுதியில் ஜீவாவுக்கும் காஜலுக்கும் விவாகரத்து நடந்ததா? இல்லையா? யார், யாரை திருமணம் செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

எந்தவித லாஜிக்கும் இல்லாமல் படம் முழுக்க நகைச்சுவையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சிவரை சும்மா காமெடி யில் பின்னி இருக்கிறார். என்று தான் சொல்லணும். கொஞ்சம் இரட்டை வசனங்களை தவிர்த்து இருக்கலாம். தனது முந்தைய படத்தைப்போலவே இந்த படத்தையும் ஊட்டியிலேயே படமாக்கியிருக்கிறார். என்றாலும், வித்தியாசமான இடங்களை வித்தியாசமாக காட்டியவிதம் அருமை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஓவியம் தீட்டியதுபோல உள்ளது

நகைசுவை ஜீவாக்கு ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே காமெடியில் அசத்தியுள்ள ஜீவா இதில் மேலும் சும்மா அட்டகாச படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாகவும், அவருடைய உடையலங்காரமும் ரசிக்கும்படி இருக்கிறது.

காஜல் அகர்வால் படம் முழுக்க கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக வைத்து நடித்திருக்கிறார்.

பால சரவணன், ஆர்.ஜே.பாலாஜி படத்தின் காமெடிக்கு படத்துக்கு மிக பெரிய பலம் ஜீவாவின் அப்பாவாக வரும் மயில்சாமி காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். மயில்சாமிக்கு ஜோடியாக வரும் மதுமிதா சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக தனது கேமராவில் படம்பிடித்திருக்கிறார். லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் பாடல்கள் எல்லாமே ஏற்கனவே ஹிட்பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘கவலை வேண்டாம் கவலையில்லாமல் சந்தோசமாக பார்க்கலாம். Rank 5/3.5

Leave a Reply