
‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் தோற்றம் கவனம் ஈர்ப்பு
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வெளியீட்டை நோக்கி முன்னேறி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கயாடு லோஹரின் கேரக்டர் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அந்த போஸ்டரில், பழமையான காலகட்டத்தை நினைவூட்டும் விண்டேஜ் தோற்றத்தில் கயாடு லோஹர் காட்சியளிப்பது படத்தின் காலப்பின்னணியை உணர்த்துகிறது. இருப்பினும், படத்தில் அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
கன்னட திரைப்படமான ‘முகில்பேட்’ மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு லோஹர், மலையாளத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘டிராகன்’ அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கயாடு லோஹரின் மூன்றாவது மலையாள திரைப்படமாகும். இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கயாடு லோஹர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1950–60 காலகட்ட கேரளாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும்.
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் முழுமையான ஆக்சன் பொழுதுபோக்கு படமாக அமையும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டர், டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்புக் கலை பயிற்சி பெறும் வீடியோக்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் தயாரிக்கும் இப்படத்தை, சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சானுக்யா, சைதன்யா மற்றும் சரண் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார்.
டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

Kayadu Lohar’s Vintage Look in ‘Pallichattambi’ Gains Attention
The upcoming film Pallichattambi, directed by Dijo Jose Antony and starring Tovino Thomas in the lead role, is progressing towards its release. The character poster of the film’s female lead, Kayadu Lohar, has now been unveiled and has received a positive response from fans.
The poster, which was shared on social media, features Kayadu Lohar in a vintage look that reflects the film’s period setting. However, the makers have not yet officially revealed the name of her character in the movie.
Kayadu Lohar, who made her film debut through the Kannada movie Mugilpete, gained attention in Malayalam cinema with Pathonpatham Noottandu. Later, the Tamil film Dragon, released last year, became a major turning point in her career.
Pallichattambi marks Kayadu Lohar’s third Malayalam film. She is also playing the female lead in I Am Game, starring Dulquer Salmaan. The shooting of both films is currently underway. Apart from these, Kayadu continues to act as a leading lady in several Tamil and Telugu projects.
Set in Kerala during the 1950s–60s, Pallichattambi is said to be a full-fledged mass action entertainer. The previously released motion poster, title poster, and videos featuring Tovino Thomas training in martial arts have already heightened expectations for the film.
The film is produced by Noufal and Brijeesh under the banner of Worldwide Films, along with Chanukya, Chaitanya, and Charan under C Qube Bros Entertainment. Megha Shyam and Thanseer serve as co-producers, while the screenplay is written by S. Suresh Babu.
Apart from Tovino Thomas and Kayadu Lohar, the film also features several prominent actors, including Vijayaraghavan. Pallichattambi is scheduled for release on April 9.
