

பிரபல பக்தி பாடகர் கலைமாமணி வீரமணி ராஜு விற்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் , இசை கலைஞர்கள், பாடகர்களை கவுரவிக்கும் வகையில் ஹரிவராசனம் என்ற பெயரில் விருதும் ரூ. 1 லட்சம் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டுக்கான விருது பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜுவிற்கு வழங்கப்பட்டது. மகர விளக்கு தினமான ஜனவரி 14-ந் தேதி சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடை பெற்ற விழாவில் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் வழங்கினார். இந்த விழாவில், ராஜு ஆபிரகாம் எம்.எல்.ஏ, தேவஸ்தான லைவா வாசு, உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில் இந்த விருதினை இசையமைப்பாளர் இளையராஜா, பிர பால பாடகர் மறைந்த எஸ்.பி.பால சுப்ரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாடகி சுசீலா, ஜானகி, சித்ரா உட்பட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
