உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு K H 234 டைட்டில் அறிவிப்பு வீடியோ நவம்பர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் நாயகன் படத்திற்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். இதனால் இந்த படத்தை தயாரிக்க பல முன்னனி நிறுவனங்கள் தயாரிக்க போட்டி போடுகிறார்கள் அனால் கடைசியாக இந்த படத்தை கமல்ஹாசனின் ராராஜ்கமல் இன்டெர் நேஷனல் பிலிம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் மணிரத்தினத்தின் மதராஸ் டாக்கீஸ் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் இசைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் வேலையை ஸ்ரீகர்.பிரசாத் செய்ய சண்டை பயிற்சியை அன்பறிவு என இன்னும் பல முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியிடன் இணைகிறார்கள்.
நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனின் 69 வது பிறந்த நாள் முன்னிட்டு K H 234 டைட்டில் அறிவிப்பு வீடியோ நவம்பர் மாலை 6 மணிக்கு இயக்குனர் மணிரத்தினம் பிரத்யேகமாக வெளியிடுகிறார்.