Monday, October 7
Shadow

கொஞ்சம் கொஞ்சம் மிக பெரிய வெற்றிப்படமாக அமையும் இயக்குனர் சீனு ராமசாமி

“கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இரு மாநிலங்களின் எல்லையில் வாழும் மக்கள் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களின் வாழ்வியலை சொல்லும் படம்தான் கொஞ்சம் கொஞ்சம். படம் முழுவதும் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமப்புரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழந்தைகளின் தந்தை, தாய் இருவரில் ஒருவர் மலையாளியாக இருப்பார், அல்லது தமிழராக இருப்பார். படத்தின் ஹீரோயின் தந்தை தமிழ், தாய் மலையாளம் இப்படித்தான் கதையும் இருக்கும்” என்கிறார் கொஞ்சம் கொஞ்சம் படத்தின் இயக்குனர் உதய சங்கரன்.

மிசோமா புரொடக்ஷன் சார்பில் சி.கே.பெட்டி, பி.ஆர்.மோகன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கோகுல் கிருஷ்ணா, நீனு, அப்புக்குட்டி, ஜாங்கிரி மதுமிதா, பிரியா மோகன் நடித்துள்ளனர். வல்லவன் இசை அமைத்துள்ளார். பி.ஆர்.நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். “அப்புக்குட்டி பார்டரில் கடை நடத்துபவராக வருகிறார். அவரது மனைவியாக மதுமிதா நடித்துள்ளார். அக்கா, தம்பி பாசத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது” என்கிறார் இயக்குனர் உதய சங்கரன்.

இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில் என்னடா அழைத்து விட்டார்களே பொய் ஆகவேண்டும் என்று வந்தேன் ஆனால் உள்ளே நுழையும்வரை அப்படி தான் இருந்தேன் இந்த படத்தின் பாடல்களும் ட்ரைலர் பார்த்தவுடன் என் என்னத்தை மாற்றிவிட்டேன் மிக சிறந்த படத்தை வாழ்த்தி பேசவந்து இருகிறோம் என்று பெருமை கொண்டேன் இன படத்துக்கு இசை மற்றும் ஒளியமைப்பாளர் மிக பெரிய பலம் நிச்சயம் மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை

Leave a Reply