
இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் ‘நானும் மனிதன்தான்’ என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய “தென்றல்” என்ற பத்திரிக்கையில் “அருணன்” என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார்.

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அவர்கள்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும். இவர் கதை – வசனம் எழுதி தயா ரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு சிறந்தப் படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலை மாமணி விருதை அவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு. பஞ்சு அருணாசலம் தனது 75 வது வயதில் சென்னையில் 2016 ஆண்டு 9 தேதி அன்று காலமானார்.

இவர் இயற்றிய சில பாடல்கள்
கலங்கரை விளக்கம் படத்தில், எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் டி.எம்/ சவுந்தரராஜன் பாடிய “பொன்னெழில் பூத்தது”, நானும் ஒரு படத்தில் “பூப்போல பூப்போல பிறக்கும்”, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய “கண்மணியே காதல் என்பது”, தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய “காதலின் தீபமொன்று ஏற்றினாளே”, ஏழை பங்காளன் படத்தில் “தாயாக மாறவா”, மாப்பிளை படத்தில் படத்தில் இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய “மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே”, காற்றினிலே வரும் கீதம் படத்தில் “ஒரு வானவில் போலே என்”, அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்கள்
இவர் இயக்கிய திரைப்படங்கள்
1977ல் இளைய தலைமுறை, என்ன தவம் செய்தேன், சொன்னதை செய்வேன், 1979ல் நாடகமே உலகம், 1988ல் மணமகளே வா, 1990ல்
புதுப்பாட்டு, 1992ல் கலிகாலம், தம்பி பொண்டாட்டி
இவர் தயாரித்த படங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன், எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி, தம்பி பொண்டாட்டி, வீரா, பூவெல்லாம் கேட்டுப்பார், ரிஷி, சொல்ல மறந்த கதை, மாயக் கண்ணாடி, காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
இவர் எழுத்தில் வெளியான படங்கள்
ரிஷி, மாயா பஜார், தொட்டில் குழந்தை, சிங்கார வேலன், தம்பி பொண்டாட்டி, எங்கிட்ட மோதாதே, புதுப்பாட்டு, அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, மணமகளே வா, குரு சிஷ்யன், என் ஜீவன் பாடுது, தர்மத்தின் தலைவன், நீதானா அந்தக்குயில், உயர்ந்த உள்ளம், ஜப்பானில் கல்யாண ராமன், தம்பிக்கு எந்த ஊரு, குவா குவா வாத்துகள், வாழ்க்கை, தூங்காதே தம்பி தூங்காதே, மண்வாசனை, பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், சகலகலா வல்லவன், மகனே மகனே, எல்லாம் இன்பமயம், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், முரட்டுக் காளை, உல்லாசப்பறவைகள், ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன், கௌரிமான், வெற்றிக்கு ஒருவன், வட்டத்துக்குள் சதுரம், புவனா ஒரு கேள்விக்குறி, துணிவே துணை, மயங்குகிறாள் ஒரு மாது

இவர் எழுதிய பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள்
1960ல் தெய்வ பிறவி, 1963ல் ஆசை அலைகள், 1965ல் கலங்கரை விளக்கம், 1975ல் மயங்குகிறாள் ஒரு மாது, 1976ல் அன்னக்கிளி,
1977ல் புவனா ஒரு கேள்விக்குறி, 1977ல் காயத்ரி, 1977ல் ஆடு புலியாட்டம், 1978ல் முள்ளும் மலரும், 1978ல் வட்டத்துக்குள் சதுரம், 1978ல் பிரியா, 1979ல் கௌரிமான், 1979ல் வெற்றிக்கு ஒருவன், 1979ல் ஆறிலிருந்து அறுபதுவரை, 1979ல் கவிக்குயில், 1980ல் குரு, 1980ல் உல்லாசப் பறவைகள், 1980ல் முரட்டுக்காளை, 1980ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே, 1980ல் அன்புக்கு நான் அடிமை, 1981ல் அலைகள் ஓய்வதில்லை, 1981ல் கர்ஜனை, 1981ல் கழுகு, 1981ல் சங்கர்லால், 1981ல் எல்லாம் இன்பமயம், 1981ல் கடல்மீன்கள், 1981ல் மீண்டும் கோகிலா, 1982ல் கோபுரங்கள் சாய்வதில்லை, 1982ல் ராணி தேனி, 1982ல் எங்கேயோ கேட்ட குரல், 1983ல் கோழி கூவுது, 1983ல் ஆனந்தக்கும்மி, 1983ல் அடுத்த வாரிசு, 1983ல் மண்வாசனை, 1984ல் அம்பிகை நேரில் வந்தாள், 1984ல் தம்பிக்கு எந்த ஊரு, 1984ல் வைதேகி காத்திருந்தாள், 1984ல் வாழ்க்கை, 1985ல் புதிய தீர்ப்பு, 1985ல் மனக்கணக்கு, 1986ல் நீதானா அந்தக்குயில், 1987ல் உள்ளம் கவர்ந்த கள்வன், 1988ல் மணமகளே வா, 1988ல் தர்மத்தின் தலைவன், 1989ல் மாப்பிள்ளை, 1990ல் புதுப்பாட்டு, 1991ல் தர்மதுரை, 1993ல் சின்ன கண்ணம்மா, 1994ல் வியட்நாம் காலணி, 1995ல் மாயா பஜார், 2001ல் ரிஷி
