
Behindwoods Productions தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் – பிரபுதேவா இணையும் ‘Moonwalk’ படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் கைப்பற்றியது
Behindwoods Productions நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும், 29 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் ஒன்றிணையும் ‘Moonwalk’ திரைப்படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான லஹரி மியூசிக் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.
Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் இந்தப் படம், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கை இணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மனதை வருடும் இசை காரணமாக, படம் குறித்து ஏற்கனவே திரைத் துறையில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
லஹரி மியூசிக் நிறுவனர் மனோஹரன் நாயுடு தெரிவித்ததாவது:
“இது எங்கள் நிறுவனம் தொடங்கியதிலிருந்து 50வது ஆண்டு. ‘Moonwalk’ படத்தின் இசை உரிமையைப் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் கேட்டுள்ளேன். ஒவ்வொரு பாடலும் தனித்துவமானது. மனோஜ் NS அவர்களின் முயற்சி மற்றும் படைப்பில் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இந்த ஆல்பம் ஒரு பெரிய Blockbuster ஆகும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
இப்படத்தை இயக்கியுள்ள மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் தெரிவித்ததாவது:
“லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பம் ‘ரோஜா’வை வெளியிட்ட நிறுவனம். மேலும், பிரபுதேவா நடித்த பல படங்களிலும் லஹரியின் பிரபலமான ஆல்பங்கள் உள்ளன. தென்னிந்திய படங்களுக்கான லஹரியின் Distribution Network மற்றும் இசை விளம்பர அனுபவம் ‘Moonwalk’ படத்திற்கு உறுதியான பலமாக இருக்கும். பல மொழிகளில், பல தளங்களில், இசையை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் இந்த ஒத்துழைப்பு முக்கிய மைல்கல்,” என்றார்.
Moonwalk படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன், அனைத்து வயது குழுவினருக்கும் பொருந்தும் குடும்ப பொழுதுபோக்காக இந்த படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முழுமையடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக ‘Moonwalk’ படத்தின் இசை வெளியீடு இருக்கும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘Storm – The Moonwalk’s Anthem’, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்திருக்கும் முதல் பாடல் வீடியோ, தமிழ் ராப் இசைக்கலைஞர் அறிவு பாடிய ராப்புடன் வரும் நவம்பர் 19, புதன்கிழமை, லஹரி மியூசிக் மற்றும் Behindwoods TV யூடியூப் சேனல்களில் மட்டும் வெளியிடப்படுகிறது.

Lahari Music Acquires the Audio Rights of ‘Moonwalk’, the Grand Production of Behindwoods Productions Featuring the Reunion of A.R. Rahman and Prabhu Deva
Lahari Music, one of South India’s most celebrated and historic music labels, has officially acquired the audio rights of ‘Moonwalk’, a grand production by Behindwoods Productions that marks the reunion of two Indian icons—A.R. Rahman and Prabhu Deva—after 29 years.
Directed by Behindwoods Founder & CEO Manoj Nirmala Sreedharan, Moonwalk is shaping up to be a celebration of music, dance, and wholesome family entertainment. With soul-stirring music composed by the Oscar-winning maestro A.R. Rahman, the film has already created huge anticipation among fans and the film industry.
Speaking about this collaboration, Mr. Manoharan Naidu, Founder of Lahari Music, said:
“This is our 50th anniversary year, and we are delighted to partner with Moonwalk by acquiring its audio rights. I have listened to all five songs in the film—each one stands out with its own uniqueness. I truly appreciate Manoj NS’s sincere efforts and hard work. I am confident that this will be a blockbuster album.”
Director Manoj Nirmala Sreedharan said:
“Lahari Music has the pride of releasing A.R. Rahman’s very first album—Roja—which became a milestone in Indian music history. The company has also been associated with several popular albums in Prabhu Deva’s films.
Their powerful distribution network and deep expertise in music promotion will be a major strength for Moonwalk. This collaboration will help take the film’s music across multiple languages and platforms. Lahari has previously released milestone albums like Gentleman and Kadhalan (Telugu: Premikudu). Moonwalk marks the third major collaboration between us.”
Moonwalk stars Prabhu Deva in the lead role, alongside Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satish, Nishma Chengappa, Sushmita Nayak, Redin Kingsley, Motta Rajendran, Lollu Sabha Swaminathan, Dr. Santhosh Jacob, Deepa Shankar, and Ramkumar Natarajan.
The film promises to be a quality family entertainer, beautifully blending world-class choreography, humor, and emotions to celebrate Indian music, dance, and comedy.
Filming has been completed, and post-production work is progressing rapidly. The audio launch of Moonwalk is expected to be one of the most anticipated events of 2026.
The first song video, “Storm – The Moonwalk’s Anthem,” featuring A.R. Rahman and Prabhu Deva together, along with a rap by Tamil rap artist Arivu, will premiere on Wednesday, November 19, exclusively on Lahari Music and Behindwoods TV YouTube channels.
The song promises to evoke nostalgia and excitement among fans.
