
லெஜெண்ட் சரவணனின் அடுத்த முயற்சி – ‘லீடர்’ திரைப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான லெஜெண்ட் சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘லீடர்’ என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரமாண்ட நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், ‘பாகுபலி’ பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல், ஜெயஸ்மிர்தா, பத்மன், யோகிராம், ஓ.ஏ.கே சுந்தர், மகாநதி சங்கர், மரியம் ஜார்ஜ், “ஆதித்யா” கதிர், வேல் அருணாச்சலம், நிரஞ்சன், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எஸ். வெங்கடேஷ் மேற்கொள்வதுடன், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை கவனிக்கிறார். மேலும், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ள நிலையில், கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டுள்ளார்.
‘லீடர்’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ படம் முழுக்க ஆக்சன் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கிளிம்ஸ் வீடியோவில் லெஜெண்ட் சரவணன் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மேலும், ‘லெஜெண்ட்’ படத்துடன் ஒப்பிடும்போது, நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகளில் லெஜெண்ட் சரவணன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முழுநீள ஆக்சன் படமாக உருவாகி வரும் ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் லெஜெண்ட் சரவணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Legend Saravanan’s Next Venture Titled ‘Leader’ – Official Announcement
After The Legend, Legend Saravanan returns as the lead actor in his next film titled Leader. The official announcement, along with the first-look poster and a glimpse video, was unveiled at a grand event held at a star hotel in Chennai.
Popular Bollywood actress Payal Rajput plays the female lead in Leader. The film also features an ensemble cast including Shaam, Andrea, Santhosh Prathap, Lal, Baahubali Prabhakar, Amritha Iyer, VTV Ganesh, Aishwarya, Aranthangi Nisha, child artist Iyal, Jayasmirtha, Padman, Yogiram, OAK Sundar, Mahanadhi Shankar, Mariam George, “Adithya” Kathir, Vel Arunachalam, Niranjan, Shobhan Babu, Ashok Pandian, and several others in key roles.
Directed by Durai Senthil Kumar, Leader has music composed by Gibran Vaibodha. Cinematography is handled by S. Venkatesh, while editing is by Pradeep E. Raghav. Action sequences are choreographed by Mahesh Mathew, and art direction is by G. Durairaj.
The title Leader itself sparked curiosity and surprise among the audience. The first-look poster strongly hints at an intense action-oriented film, a promise that is further reinforced by the released glimpse. The glimpse, though brief, makes a powerful impact, showcasing high-octane action sequences.
For the first time, Legend Saravanan appears in a full-fledged action film. His performance in the action scenes has been described as impressive, showing a significant improvement in both acting and screen presence compared to The Legend. The scale and intensity of the fight sequences stand out as a major highlight.
The makers have officially announced that Leader is scheduled for a theatrical release in April.
