Monday, May 20
Shadow

மனைவியின் மகத்துவத்தை போற்றும் மனைவியின் மறுபக்கம்

 

கெட்ட சகவாசம் உள்ள ஒருவனை ஒரு பெண் காதலித்து கரம்பிடிக்கிறாள். எனினும் அவனது தவறான செயல்பாடுகள் தொடர்கிறது. இவ்வேளையில் மனைவி பிரசவ வலியில் துடிக்கிறாள். தன் கண்முன்னே மோசமான நிலைக்கு ஆளான மனைவியை கண்டு கணவனும் புழுவாய் துடிக்கிறான். இறுதியில் மனைவியின் துயரங்களை கண்டு மனம் திருந்துகிறான்.

புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வரிசையில் இப்படமும் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும் என்கிறார் இயக்குனர் உடுமலை பி.டி.ஜிஜு.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தாரத்தில் தாய்மையை உணர்ந்த நேரம் கைமீறி போனதே எல்லாம் நான் செய்த பாவம்…

எனும் பாடல் தாரத்தையும் தாய்மையின் பெருமையையும் கூறும் பாடலாக இடம்பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு பெங்களூர்,குமுளி, உடுமலைபேட்டை , வண்டலூர் போன்ற இடங்களில் 35 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

கதையின் நாயகனாக டிங்கு ராஜ், நாயகியாக திவ்யபாரதி நடிக்க ஷெரீப், கோபி, குமார், முகேஷ், டாக்டர். ஆலம் எஸ்.சிவம் மற்றும் லட்சுமி செந்தில்வேல் ஆகியோர் கதாபாத்திரங்களாகியுள்ளனர்.

ஒளிப்பதிவு –
அன்னை செல்வா
பாலமுருகன்

இசை – ரீகன்
எடிட்டிங்-
ஆனந்தகிருஷ்ணன்
நடனம். யோயோ.ராஜேஷ்
ஸ்டண்ட்-
“இடிமின்னல்”இளங்கோ
இணை இயக்கம் –
ஜான்சுந்தர்

தயாரிப்பு
…………………
ஏ.சி.எஸ்.ஆர்.எஃப்
கி.பா. அசோக்
ஏ.ஆர்.சுஷன் கார்த்திக்

கதை திரைக்கதை வசனம் பாடல்கள்
இயக்கம்
………………..
உடுமலை பி.டி.ஜிஜு

– வெங்கட் பி.ஆர்.ஓ