Wednesday, April 29
Shadow

மரகதநாணயம் படத்தின் வெற்றியை பற்றி தயாரிப்பாளர் சொன்ன தகவல்

 

மரகத நாணயம்’ ரிலீசாகி நேத்தியோட 3 வருஷமாச்சு இதை பற்றி தயாரிப்பாளர் டெல்லி பாபு சொன்ன சுவாரியச தகவல்களை பாக்கலாம்

`முதல்-யே சொல்லிடறேன்.. இந்த மரகதநாணயம்’ படத்தை முடிச்சிட்டு என்கிட்டே போட்டுக்காட்டும்போது, `சிரிப்பே வரல’ன்னு சொல்லிட்டேன். சரி.. நம்மகிட்டே ஏதோ மூட் அவுட் இருக்குமுன்னு நெனச்சி என் நண்பர்கள் சிலருக்கு போட்டுக் காட்டும்போதும், அதே ரியாக்‌ஷன்தான். ஆனா டைரக்டர் `சார், கூட்டத்தோடு தியேட்டரில் பார்க்கும்போது வேற அனுபவமா இருக்கும்’னு சொன்னார். அதே மாதிரி, படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி பத்திரிகையாளர் காட்சி போட்டோம். படம் ஆரம்பிச்ச 10-வது நிமிஷத்திலேயே சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பிச்சது. பல இடங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. படம் முடிஞ்சதும் எல்லா பத்திரிகையாளர்களும் பாராட்டிட்டு போனாங்க. அப்போதான் படத்துமேல ஒரு நம்பிக்கையே வந்துச்சு. தியேட்டரில் படம் வந்ததும், அது வேற மாதிரியான அனுபவமா இருந்துச்சு. மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தாங்க.’’

இப் படம் உருவான கதைப் பத்தி இயக்குநர் சொன்னது என்னன்னா இந்த கதையே நியூஸ் பேப்பர்ல வந்த ஒரு சின்ன செய்தி மூலமாத்தான் தொடங்கிச்சாம். ஒரு நாள் பேப்பர்ல இறந்தவரின் உடலை அடக்கம் பண்ணும்போது, அவர் உயிரோட எழுந்திருச்சதா ஒரு நியூஸ் பார்த்தாராம். அப்படி எழுந்திருச்சவர், உருவத்தில் அதே ஆளாகவும், கேரக்டரில் வேற ஒரு ஆளாகவும் இருந்தால் எப்படி இருக்கும்னு தோணி. அப்படி எழுந்து வர்றவருக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தால், அவரோட நண்பர்களையும் வர வச்சானு அந்த ஐடியா பெருசாகப் பெருசாக `மரகத நாணயம்’ படத்தோட கதை ரெடியாச்சு. எல்லாரும் அந்த மரகதக் கல்லை யோசிச்சிட்டுதான் இந்தக் கதையையே எழுதி இருப்பாங்கன்னு நினைப்பாங்க. ஆனால், அந்தக் கல் விஷயத்தையே கடைசியாத்தான் நாங்க சேர்த்தோம்.’’

`அந்த “ஸ்கிரிப்ட் ரெடியானதும் வேற ஒரு புரொடக்டஷன் டீமிடம் சொல்லி, படமும் கமிட்டாகியாச்சு. ஆதி கிட்ட கதை சொல்லி அவரும் ஓகே பண்ணிய பொறகு, அந்தக் கம்பெனியில அப்போ இந்தப் படத்தை பண்ண முடியாம போச்சு. அதுக்கப்புறம், இப்போ சமீபத்தில் காலமான `4ஜி’ பட இயக்குநர் அருண்தான், எங்க `ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி’யில `மரகத நாணயம்’ மாதிரி ஒரு கதைதான் கேட்கிறாங்க’ன்னு சொல்லி, சரவனை அனுப்பி வெச்சார். வந்த இடத்தில் சொன்ன கதை ஓ கே பண்ணினேன்.. முதல் படமான `உறுமீன்’ சீரியஸான படமா இருந்ததனால, ரெண்டாவது படமா `மரகத நாணயம்’ மாதிரி காமெடி படமா இருக்கட்டும்னு இந்த கதையை செலெக்ட் பண்ணினேன்.’’

அப்புறம் `ஹீரோவா யாரை வெச்சு போகலாம்னு பேசும்போது, ஆதி நேமைச் சொல்லி கமிட் செஞ்சதை டைரக்டர் சொன்னார். ஆதியும் என்கிட்டே பேசுனார். `எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு சார். உங்களுக்கு ஓகேனா நானே பண்றேன்’னு சொன்னார். ஆனால், அந்த ஆதி ஆக்‌ஷன் ஹீரோ. அவரை வெச்சு காமெடி படம் பண்ண முடியுமானு கன்ஃப்யூசா இருந்துச்சு.

அதுனாலே நானே சில ஹீரோக்கள்கிட்ட கதை சொல்றதுக்காக அனுப்பியும் வெச்சேன். ஆனால், அந்த ஹீரோக்களுக்கெல்லாம் கதை பிடிச்சிருந்தது. ஆனால், படத்துல ஹீரோ அளவுக்கு மற்ற சில கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருந்ததுனால, ஹீரோ கேரக்டர் தனியா தெரியாதேனு தயங்குனாங்க. அதனால, படமும் ஆரம்பிக்க லேட்டாகிட்டே போச்சு. அதுக்கப்புறம், `சரி ஆதியை வெச்சே போகலாம்’னு முடிவு செஞ்சி முடிச்சு ரிலீஸாகி மூனு வருஷம் ஓடி போனதில் மகிழ்ச்சி – அப்படீன்னார்