Tuesday, April 28
Shadow

OTT யில் படங்கள் ரிலிஸ் பற்றி டைரக்டர் ஷங்கர் சொன்னது

`தியேட்டர் அனுபவத்துல இருக்கிற எனர்ஜி, சந்தோஷம் ஓ.டி.டி -யில நிச்சயமா கிடைக்காது. ஆனா, எந்த கட்டாயமும் இல்லாமல் நாம நினைச்ச விஷயங்களை, கமர்ஷியல் சினிமாவுல சொல்ல முடியாத பல விஷயங்களை சொல்றதுக்கான வாய்ப்பு ஓ.டி.டி -யில் இருக்கு. அப்படி நான் ஓ.டி.டி-யில் படம் பண்ற மாதிரி சூழல் அமைஞ்சா, அதை எவ்ளோ என்ஜாய் பண்ணி பண்ண முடியுமோ, உற்சாகமா பண்ணமுடியுமோ அப்படி பண்ணுவேன். நிச்சயமா அதுவும் மக்களுக்கு பிடிக்கிற மாதிரிதான் இருக்கும்.

அதுக்காக இன்றைய சூழலில் ஓ.டி.டி-யில் இறங்கிப்பார்த்திடுவோம்னு தோணியிருக்கா?-ன்னுக் கேட்டா இதுவரைக்கும் அப்படி தோணலை. ஏன்னா, என் முழு கவனமும் இப்போ `இந்தியன் 2′ படத்துலதான் இருக்கு. ஆனா, நாளைக்கு நாமளும் இதுல படம் பண்ணவேண்டியது வருமோனு ஓ.டி.டி-யை கவனிச்சிட்டு இருக்கேன். வரும்போது பார்த்துக்கலாம்.