Monday, May 20
Shadow

மறக்குமா நெஞ்சம் – திரைவிமர்சனம் Rank 2.5/5

மறக்குமா நெஞ்சம் முன்னணி தொலைக்காட்சி நடிகர்கள் வெள்ளித்திரையில் மீண்டும் வளம் வந்து இருக்கும் ஒரு படம் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக ரக்ஷன் தீனா,ராகுல்,முத்தழகன், மெல்வின் டென்னின்ஸ், மாலினா, சுவேதா, முனீஸ்காந்த், மற்றும் பலர் நடிப்பில் சச்சின் வாரியார் இசையில் கோபி துரைசாமி ஒளிப்பதிவில் ராகோ .யோகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மறக்குமா நெஞ்சம்

தமது வாழ்வில் பள்ளிப் பருவம் என்பது என்றுமே மறக்க முடியாத ஒன்று. எதிர்காலத்தைப் பற்றிய கவலை இன்றி நண்பர்கள் உடன் சந்தோஷமாக சுற்றித் திரிந்த காலம். அப்படி ஒரு நண்பர்கள் பற்றியும் அதில் உள்ள காதல் பற்றியும் படமாக வந்துள்ளது மறக்குமா நெஞ்சம். படத்தின் கதை. ரக்ஷன், தீனா, மலினா, ராகுல் ஆகியோர் பள்ளியில் படித்த நண்பர்கள். ரக்ஷன் தனியாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென இவர்கள் +2 தேர்வு முறைகேடாக நடத்தப்பட்டது என்று தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சியாக ரக்ஷன் மட்டும் சந்தோஷமாக இருக்கிறார். மூன்று மாதத்தில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்தில் நடக்கும் விஷயங்கள் தான் கதை. தேர்வு நடந்ததா? ரக்ஷன் காதல் என்ன ஆனது என்பதே மறக்குமா நெஞ்சம்.

ரக்ஷன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த ரக்ஷன் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நண்பனாக நடித்தார். இப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். முடிந்தவரை தன் முகத்தில் நடிப்பை கொண்டு வர முயன்றுள்ளார். எல்லா சூழலுக்கும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும். நாயகியாக மலினா அழகாக இருக்கிறார். பள்ளி உடையில் ரசிக்க வைக்கிறார். நடிப்பும் ஓகே. நண்பர்களாக வரும் தீனா, ராகுல், முத்தமிழ் உள்ளிட்டோர் நடிப்பும் பரவாயில்லை. தீனா பேசிக்கொண்டே இருக்கிறார். சில இடங்களில் அது செட் ஆகவில்லை.

வழக்கமான பள்ளிக்கால காதல் படமாக இருந்தாலும் திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லை. இதனால் பார்வையாளர்கள் தங்களுடன் ஒன்ற முடியவில்லை. ராக்கோ யோகேந்திரனின் எழுத்து இன்னும் புதிதாக இருந்து இருக்கலாம். திரைக்கதையில் இன்னும் கூடுதல் புதுமையை சேர்த்திருக்கலாம். சச்சின் வாரியரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. தாமரையின் வரிகள் பாடலின் வரிகளை உணர வைக்கிறது. மொத்தத்தில் மறக்குமா நெஞ்சம் – மறக்க வேண்டியது. ரேட்டிங் 2.5/5