Wednesday, January 14
Shadow

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்..

ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை.

கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

பிரபலமான ரவுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீஷ் பேராடி) வீழ்த்தும் வேலையை பார்க்கலாம். மார்க்கெட் ராஜாவின் வளர்ந்து செல்வாக்கு அதிகரித்து கொண்டே வருவதால், அவரை அழிக்க செய்ய வடக்கிலிருந்து (பிரதீப் ராவத்) என்ற நிபுணரை அழைத்து வர முடிவு செய்கிறார்கள்.

இந்தநிலையில், ஆபரேஷன் தவறாகி, மருத்துவ கல்லூரி மாணவர் சந்திரபாபு (விஹான்) மரணம் அடைகிறது. சாந்தகுணமுள்ள சந்திரபாபுவின் ஆவி மார்க்கெட் ராஜாவின் உடலுக்குள் நுழைந்து விடுகிறது. மார்க்கெட் ராஜாவுக்கு பேய் பிடித்துள்ள விஷயத்தை யாருக்கும் தெரியமால், அவருடன் இருப்பர்கள் மறைத்து விடுகின்றனர். இயக்குனர் சரண் அவரது சிறந்த படங்களைப் போலவே, நகைச்சுவையான படத்தை படமாக நினைத்துள்ளார். இது ரசிகர்களை சிரிக்க வைக்க தவறி விட்டது.

இந்த் படத்தில் நடித்துள்ள துணை நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார். தனது மகனின் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது சொந்த சிறிய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மார்க்கெட் ராஜாவின் தாயார் சுந்தரி பாயாக ரோகினி தனது கதாபாத்திரத்தின் அப்பாவியாக அற்புதமாக வெளிப்படுத்துகிறார், அதே நேரத்தில் ரோஹினி சந்திரபாபுவின் செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள தாயாக நடித்துள்ளார். ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான ஒரு காட்சியில் சிறந்த மசாலா திரைப்பட தருணத்தையும் காட்டியுள்ளது, படத்தை கேலிக்கூத்து மாற்றியுள்ளது.

படத்தில் உள்ள கதாபாத்திரங்களையும் அவற்றின் கேரக்டர்களையும் விளக்கி காட்ட இயக்குனர் சரண் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார், மேலும் சில நகைச்சுவைக்காக (தேவதர்ஷினி ஒரு பேய் பஸ்டராக) வேலை செய்வது போன்றை சிரிப்பை வரவழைக்க தவறிவிட்டது.

அரவ் சாந்தகுணமாக நடிக்க வேண்டிய காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார். ஆனால் பயமுறுத்தும் டானாக நடிப்பதில் சற்று திணறுவது நன்றாகவே தெரிகிறது.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் இயக்குனர் சரனின் முந்தைய இரண்டு படங்களை விட சிறந்த படமாகவே இருக்கிறது.

படத்தின் பிளஸ்: அரவ் மற்றும் துணை நடிகர்களின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்: சிரிப்பே வராத நகைச்சுவை காட்சிகள்

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.