Sunday, June 4
Shadow

மெர்சல் பார்ட் 2 தான் விஜய் 63 அட்லி சூசகம்

விஜய் மற்றும் அட்லி கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டனி என்று தான் சொல்லணும் ஆம் இந்த கூட்டணி தொடரணும் என்று ரசிகர்கள ஆசை அதற்கு அச்சாரமும் போட்டு விட்டார் இயக்குனர் அட்லி என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்குது அதற்கு சில உண்மை காரணங்களும் உள்ளதாம் விஜய் 63 படத்தை இயக்க போவதும் அட்லி தானாம் அதற்கான வெளிகள் இப்பே தயார் செய்துவிட்டாராம்.

விஜய் மெர்சல் ரிலிஸிற்கு பிறகு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படமும் முடிந்து அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது.

அதை நிரூபிக்கும் பொருட்டு அட்லீயும் ஆளப்போறான் தமிழன் டைட்டிலை பதியவுள்ளேன் என்றார், மேலும், பொண்ணியின் செல்வன் கதையை படமாக எடுக்கவும் தான் விரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தெறி படத்தில் இரண்டாம் பாகம் எடுப்பது போல் தான் முடித்தேன், அதேபோல் தான் மெர்சல் கிளைமேக்ஸும் இருக்கும்.

கூட்டணி நன்றாக அமைந்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று அட்லீ கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி மருத்துவ உலகில் நிகழும் போலிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மெர்சல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply