
மெர்சல் தமிழ் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை என்று தான் சொல்லணும் இருந்தும் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி வசூலில் மாபெரும் சாதனையை புரிந்துள்ளது என்று தான் சொல்லணும் ஆ தயாரிப்பாளர் மன உலச்சல் ஏற்பட்டாலும் பொருள் நஷ்டம் இல்லை என்று தான் சொல்லணும்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது, இந்த படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில வசனங்களால் மிக பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டு பின்னர் அவையே படத்திற்கு மிக பெரிய வெற்றியை தேடி தர வழி வகுத்தது.
உலகம் முழுவதும் மாஸ் காட்டி வரும் மெர்சல் படம் இதுவரை ரூ 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மட்டும் படம் ரூ 90 கோடி வசூலை தாண்டி கபாலி பட சாதனையை முறியடித்துள்ளது.
இதிலிருந்து அடுத்த தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் தளபதி விஜய் என்பது முற்றிலும் உண்மையாகிவிட்டது