Monday, May 20
Shadow

‘மிரள்’ திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பரத் நடிப்பில் மிரள் என்ற திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சக்திவேல் என்பவர் இயக்கி இருக்கும் திரைப்படம் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் – வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.

குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை ஹாரர் திரைக்கதை மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

இந்தப் படத்தின் தொடக்கம் நல்ல வகையிலேயே அமைந்துள்ளது. குறைந்த நபர்கள், அவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என முதல் பாதி நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்திய விதம் சற்று தொய்வை கொடுக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், நடு இரவில் தன் குடும்பத்துடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் பரத் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் பேசுவது போல உள்ளது.

மிரள் படத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமாகவே உள்ளது.

படத்தின் பிளஸ்:
பரத்தின் நடிப்பு, படத்தின் ஆரம்பம் முதலே படத்தின் கதை மற்றும் திரைகதை விறுவிறுப்பாகவே சென்று கொண்டு இருக்கிறது.பிரசாத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிப்பு,

படத்தின் மைன்ஸ்:
முதல் பாதி மெதுவாக நகர்வது, திரைக்கதையாக கையாண்டதில் சற்று தடுமாற்றம், திகில் காட்சிகள் படம் நெடுகிலும் இடம்பெறாமல் போனது படத்தின் பலவீனம்.

மொத்தத்தில் மிரல் – மிரட்டி இருக்கிறது.