ரவி பார்கவன் இயக்கத்தில் தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே ஆர் விஜயா, ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த மூத்தகுடி.
மூத்தகுடி வம்சத்தை சேர்ந்த கே ஆர் விஜயா, தனது ஊர் மக்களுக்கு ஒரு ஆணையை கட்டளையிடுகிறார். அது, தனது ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்றும், சாராயத்தை விற்கவும் கூடாது என்றும் கூறுகிறார்.
அதனால், அந்த ஊருக்குள் யாரும் சாராயம் அருந்த அனுமதியில்லை.. அப்படியே யாராவது அருந்தி வந்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
இந்நிலையில், கே ஆர் விஜயாவின் பேரன்களாக வரும் தருண் கோபி மற்றும் பிரகாஷ் சந்திரா இருவரும் தங்களது முறைப் பெண்ணான அன்விஷாவை திருமணம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தருண் கோபி தடம் மாறிச் செல்கிறார்.
இதனால் தருண் கோபி வில்லனாக வரும் ராஜ் கபூரிடம் சேர்கிறார். அதன் பிறகு அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகர்கள் இருவரும் தங்களால் முடிந்த நடிப்பை இதில் கொடுத்துள்ளனர். அதிலும் பிரகாஷ் சந்திரா தனக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார். தருண் கோபி ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை கெடுத்து வைத்திருக்கிறார்.
நாயகி அன்விஷா பார்ப்பதற்கு அழகாகவும், காட்சிகளில் உயிரோட்டமாகவும் நடித்திருக்கிறார்.
கே ஆர் விஜயா தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கந்தா ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு ரசிகக் வைத்திருக்கிறது.
கதையோடு பயணமாகும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் ஜே ஆர் முருகானந்தம்.
க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் காட்சிகள் பலம்…
தமிழகத்தில் சாராயமே இருக்கக் கூடாது என்ற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த படம் பாராட்டுதலுக்குறியது.
மூத்தகுடி – மது ஒழிப்பு…