Sunday, June 21
Shadow

மிஸ்டர் சந்திரமௌலி – திரைவிமர்சனம் (ஜென்டில்மேன்) Rank 3/5

மிஸ்டர் சந்திரமௌலி இந்த வார ரிலீஸ்யில் சிறந்த படம் என்று தான் சொல்லணும் இயக்குனர் திரு படங்கள் என்றாலே ஒரு சுவாரியசமான புதுமையான விஷயத்தோடு தான் படம் தருவார் அதாவது இவரின் ஸ்டைல் என்றால் அது ஹாலிவுட் ஸ்டைல் என்று தான் சொல்லணும் அந்த வகையில் தான் இந்த படத்தையும் கொடுத்துள்ளார்.முதல் பாதி ரகளையும் பாசத்தையும் காமெடியும் கொடுத்த இயக்குனர் திரு இரண்டா பகுதி தான் வேகம் நான் சொன்ன ஆங்கில படம்வேகம் என்று தான் சொல்லணும் அதோடு திழ் சினிமாவில் இதுவரை வராத காட்சியாமைப்பும் கலந்து கொடுத்துள்ளார் .

இந்த படத்தில் இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக், ரெஜினா கசாண்ட்ரா, கார்த்திக், வரலட்சுமி,சதீஷ், இயக்குனர் அகத்தியன் இயக்குனர் மகேந்திரன்,சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார், ரிச்சட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர்.

ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.

இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.

இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர்.

அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.

அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை

கார்த்திக் மீண்டும் திரையில் பார்த்தது அப்போ பார்த்ததுபோல இருந்தது அதே குறும்பு மீண்டும் மனதுக்குள் மௌனராகம் கார்த்திக் தென்பட்டார் என்று தான் சொல்லணும் அதே ஸ்டைல் வாவ் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார் .

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் அப்பா இருக்கிறார் நல்ல நடிக்கணும் என்று நடித்தாரா இல்லை அப்பாவை மிஞ்சனும் என்று போட்டி போட்டரா என்று தெரியவில்லை இதுவரை அவர் நடித்ததில் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு திறமையை வெளிபடுத்தியுள்ளார் .

ரெஜினா முதல் முறையாக சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் அற்புதம் இந்த படத்தில் தான் சதையை நம்பாமல் தன் நடிப்பை நம்பி நடித்துள்ளார் என்று சொல்லணும் இக சிறப்பான நடிப்பு என்று தான் சொல்லணும் அதோடு இளம் ரசிகர்களுக்கு தீனியும் கொடுத்துள்ளார்

வரலட்சுமி வாவ் படத்துக்கு பலம் நம் வீட்டு பெண் போலவே இருந்தார் இதுவரை பார்த்த பெண்ணாக இல்லாமல் நல்ல நடிப்பு செயற்கை தனம் இல்லாத நடிப்பு அழகு எல்லா கலந்த ஒரு பெண்ணாக வலம் வந்துள்ளார்.

இயக்குனர் மகேந்திரன் அகத்தியன் கொடுத்த பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் அதேபோல சதீஷ் பெரிதாக ஒன்னும் இல்லை என்றாலும் சிறப்பாக செய்துள்ளார்.

இதுவரை ஹீரோவாக வலம் வந்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் வில்லனாக வலம் வந்துள்ளார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இளம் சிறந்த வில்லன் என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார்.

இயக்குனர் திரு இரண்டாம் பகுதியில் காட்டிய வேகம் முதல் பாதியுளும் காட்டி இருந்து படத்தில் தேவை இல்லாமல் பாடல் காட்சிகள் எல்லாம் இல்லாமல் தேவை என்னோமோ அதை சிறப்பாக காண்பித்து இருப்பது சிறப்பு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு அருமை

மொத்தத்தில் மிஸ்டர் சந்திரமௌலி ஜென்டில்மேன் Rank 3/5