Monday, May 20
Shadow

யாரும் இல்லாத துணை நடிகருக்கு ஈம சடங்கு செய்த இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமாவில் இன்றும் பல இன்னமும் உன்னத மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறலாம் பணம் மட்டுமே இன்று வாழும் நடிகர் நடிகைகள் மத்தியில் மனிதாபிமானம் உள்ள ஒரு சிலரும் இருக்கின்றனர்.  இந்த பட்டியலில் இசையமைப்பாளர் இமானும் சேர்கிறார் யாரும் இல்லாத  ஒரு துணை நடிகருக்கு ஈம சடங்கு செய்துள்ளார்.

யாருமற்ற நிலையில் இருந்த துணை நடிகர் பிரபு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு தீ வைத்து இறுதிச்சடங்குகளை செய்தார் பிரபல இசை அமைப்பாளர் இமான். அவருடன் இணைந்து பல எழை மக்களுக்கு உதவி வரும் உமா செல்வம் அவர்களும் இந்த காரியததில் உதவி செய்துள்ளார்.

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.

இந்நிலையில், இன்று பிரபு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலை இசையமைப்பாளர் இமானே தகனம் செய்தார். அவருக்கு கொள்ளியும் போட்டுள்ளார் பணத்துக்கு அழியும் மக்கள் நடுவில் மனித நேயத்தை காப்பாற்றும் இசையமைப்பாளர் டி இமான்.

டி.இமானின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருது.