Tuesday, April 21
Shadow

இசைகளைஞர்களுக்கு தன் சொந்த செலவில் கட்டிடம் இளையராஜா பிறந்தநாளில் அறிவிப்பு

தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை சொந்த செலவில் கட்டித்தர இருக்கிறேன்” என பிறந்த நாள் இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அறிவிப்பை வெளியிட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மாலை சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் இசை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இது திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர்

அவர்களைத் தவிர ஏசுதாஸ் மனோ பாம்பே ஜெயஸ்ரீ உஷா உதுப் பவதாரணி மது பாலகிருஷ்ணன் முகேஷ் தீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக கமலஹாசன் விவேக் தேவிஸ்ரீ பிரசாத் ஸ்ரீகாந்த் தேவா ஸ்வேதா சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் இளையராஜா பேசும்போது இசைக் கலைஞர்களின் சங்கத்திற்காக கட்டடத்தை என் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறினார்.