
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாஉக்கு ஜோடியாக க அறிமுகம் ஆகும் படம் ஒரு குப்பை கதை இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார் இந்த படத்தை காளி ரங்கசாமி இயக்குகிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி வாங்கியுள்ளார். இந்த படத்தின் இசைவெளியீடு இன்று சத்யம் திரையரங்கில் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாகநடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மிகமுக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் அதில் ரெட் ஜெயன்ட் சார்பாக உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆரம்பித்து இந்த வருடத்தோடு பத்து வருடம் ஆகிறது இந்த நிறுவனம் விஜய் அண்ணாவின் குருவி படத்தின் மூலம் ஆரம்பித்தது என்று கூறினார் இந்த பயணத்தை தொடக்கி வைத்த பெருமை விஜய் அண்ணனை சேரும் என்றும் கூறினார்.
