Monday, October 26
Shadow

மீண்டும் திரில்லர் கதையுடன் களம் இறங்கும் நயன்தாரா

நயன்தாரா திழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நாளுக்கு நாள் நிருபித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை கொடுத்து வருகிறது இவர் பிரபலமான இயக்குனர் முன்னினி நடிகர் என்று பார்ப்பது இல்லை கதையை மட்டும் சரியாக தேர்ந்துடுத்து நடிக்கிறார். அந்த வகையில் இவரில் அடுத்த படமும் இமைக்க நொடிகள் மீண்டும் ஒரு திரில்லர் படம் தான்

நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, விஜய் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா. இது விஜய் இயக்குவதாக அறிவித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால், அதை மறுத்துள்ள படக்குழுவினர், நயன்தாரா நடிக்கும் இந்த படம் திரில்லர் பின்னணி கதைக்களம் என்பதை உறுதிசெய்துள்ளது. தற்போது ‘தேவி 2’ படத்தை மொரீஷியஸ் தீவில் படமாக்கி வரும் விஜய், அதை முடித்துக்கொண்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு, நயன்தாரா படத்துக்கான வேலைகளை தொடங்க உள்ளார்.