Monday, October 26
Shadow

“ரசிகர்களுக்காக இதுவரை பார்க்காத சூர்யாவை வெளிப்படுத்துகிறேன்!” – துபாயில் மனம் திறந்த நடிகர் சூர்யா!

“ரசிகர்களுக்காக இதுவரை பார்க்காத சூர்யாவை வெளிப்படுத்துகிறேன்!” – துபாயில் மனம் திறந்த நடிகர் சூர்யா!

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு – கிரைம் த்ரில்லர், மர்டர் மிஸ்டரி, குடும்பப் பொழுதுபோக்கு எனப் பல பரிமாணங்களில் உருவாகியுள்ள புதிய முயற்சி!

துபாய்: நடிகர் சூர்யா நடிப்பில், மலையாளத் திரையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பிரத்யேக விளம்பர நிகழ்வு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில், படத்தின் சிறப்பம்சங்கள், தனது கதாபாத்திரம், ரசிகர்கள் மீதான அன்பு மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் சூர்யா.

2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் இணைத் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘சீன்’ வெளியாகிறது.

ரசிகர்களின் அன்பே எனது பலம்!

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தங்களுக்காகக் காத்திருந்து அன்பையும் ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் விருப்பம் என்றும், அது இவ்வளவு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“ஜித்து மாதவன் கதையைச் சொல்லத் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் அவர் ஒரு புதுமையான உலகத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உலகத்தில் நானும் ஒரு பகுதியாகப் பயணித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

தனது திரைப்பயணத்தைப் பற்றிப் பேசிய அவர், 28 ஆண்டுகளில் 48 திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ‘சீன்’ படத்தின் அனுபவம் தனக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

“சரவணனிடமிருந்து ரசிகர்கள் சூர்யாவை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் சூர்யாவாக இருக்கிறேன். என்னுள் இருக்கும், இதுவரை திரையில் வெளிப்படாத பல முகங்களை ரசிகர்களுக்குக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்புதான் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க எனக்குத் துணிச்சலைத் தருகிறது.

ஒரு நடிகராக நான் ஒரு சதவீதம் முயற்சி செய்தால், ரசிகர்களிடமிருந்து நூறு சதவீத அன்பு கிடைக்கிறது. அந்த அன்புக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து உழைக்கிறேன். என்னுடைய திரைப்பயணத்தில் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

‘சீன்’ – சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த புதிய அனுபவம்!

‘சீன்’ திரைப்படத்தின் வகை குறித்து ரசிகர்களிடையே எழுந்துள்ள எதிர்பார்ப்புகளுக்கு விளக்கம் அளித்த சூர்யா, இப்படம் ஒரே பாணியில் பயணிக்கும் திரைப்படமாக இருக்காது எனக் குறிப்பிட்டார்.

“இந்தப் படத்தை கிரைம் த்ரில்லர் என்றும் சொல்லலாம்; மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். அதே நேரத்தில், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குப் படமாகவும் இது இருக்கும். ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியான அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், படத்தில் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நஸ்ரியா தனது திறமையான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாகப் பாராட்டினார். தமிழில் அறிமுகமாகும் நஸ்லென், இந்தப் படத்தில் தனித்துவமான நடிப்பை வழங்கியிருப்பதாகவும், அவர் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் தீவிர ரசிகர் தான் என்றும் கூறிய சூர்யா, இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இளம் திறமைகளுக்கு வாய்ப்பு தரும் ழகரம் ஸ்டுடியோஸ்!

‘சீன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நோக்கம் குறித்துப் பேசிய சூர்யா, புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிப்பதே இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்கு என்றார்.

“ராஜசேகரும் நானும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் இணைந்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கினோம். ழகரம் ஸ்டுடியோஸ் அதன் சகோதர நிறுவனமாகச் செயல்படுகிறது.

2டி நிறுவனம் தொடர்ந்து ரசிகர்களுக்குப் பிடித்தமான, தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கும். அதே நேரத்தில், ழகரம் ஸ்டுடியோஸ் மூலம் புதிய சிந்தனைகளுடன் வரும் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம். இந்த நிறுவனத்திற்கான முதல் மேடை ‘சீன்’. எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அகரம் அறக்கட்டளையின் நிர்வாகப் பணிகளை நீண்ட காலமாகக் கவனித்து வரும் ஜெயஸ்ரீ தாமோதரன், தற்போது ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் நிர்வகிக்கத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்!”

ரசிகர்களுக்கு வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் சூர்யா பகிர்ந்துகொண்டார். சமூக வலைத்தளங்களில் நாம் தொடர்ந்து எதைப் பார்க்கிறோமோ, அதுபோன்ற உள்ளடக்கங்களே மீண்டும் மீண்டும் நம்மை வந்தடைவதைச் சுட்டிக்காட்டிய அவர், நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“நல்ல விஷயங்களைப் பார்க்கத் தொடங்கினால், தொடர்ந்து அதுபோன்ற விஷயங்களே நம் கவனத்திற்கு வரும். அதனால் நம்முடைய சிந்தனையை நல்ல விஷயங்களுக்காகச் செலவிட வேண்டும். நல்ல எண்ணங்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். அது மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரும். அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்” என்றார்.

மேலும், ‘சீன்’ படத்தில் இடம்பெறும் ‘You’re the best. You can do anything’ என்ற வசனம், ரசிகர்கள் திரைப்படத்தைப் பார்க்கும்போதும் பார்த்த பிறகும் அவர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நஸ்லென், நஸ்ரியா பகிர்ந்த மகிழ்ச்சி!

தமிழில் அறிமுகமாகும் நஸ்லென், “நான் சிறு வயதிலிருந்தே திரையில் பார்த்து ரசித்த சூர்யாவுடன் இணைந்து நடிப்பது கனவு நனவான அனுபவமாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் மிகவும் பதற்றமாக இருந்தேன். என்ன பேசுவது, எப்படி நடிப்பது என்று தெரியாமல் ஆச்சரியத்தில் இருந்தேன். இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதற்காக சூர்யா, நஸ்ரியா, ஜித்து மாதவன் ஆகியோருக்கு நன்றி. நவம்பர் 6-ம் தேதி படத்தைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துகளைப் பகிருங்கள்” என்றார்.

துபாயில் பிறந்து வளர்ந்த நஸ்ரியா நஜீம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

“12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கு நன்றி. சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவரும் மனம் விட்டுச் சிரித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

எல்லைகளைக் கடந்துவரும் தென்னிந்தியத் திரைப்படங்கள்!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து இப்படத்தை இயக்கியுள்ள ஜித்து மாதவன், மொழிகளைக் கடந்து திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் சூழல் தற்போது உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“துபாயில் மலையாளிகள் அதிகம் இருப்பதால் மலையாளத்தில் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் தமிழில் படத்தை இயக்கியிருப்பதால் தமிழிலும் பேச வேண்டும். இப்போது திரைப்படங்களுக்கு இடையிலான மொழி எல்லைகள் குறைந்து வருகின்றன. கேரளாவில் தமிழ் படங்களையும், தமிழகத்தில் மலையாளப் படங்களையும் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். எனவே ‘சீன்’ திரைப்படமும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறேன்.

சூர்யா கதையைக் கேட்ட ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்கத் தொடங்கிவிட்டார். அப்போதே அவருக்குக் கதை பிடித்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். அனைவரும் முதல் நாளிலேயே திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.

ழகரம் ஸ்டுடியோஸின் முதல் படைப்பு!

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பேசிய ராஜசேகர் பாண்டியன், ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தொடக்கமாக ‘சீன்’ அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். படத்தின் முழுமையான அனுபவத்தைத் திரையரங்கில் ரசிகர்கள் உணர்வார்கள் என்றும், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களுடன் வித்தியாசமான சூர்யாவை இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இணைத் தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன், ழகரம் ஸ்டுடியோஸ் என்பது சூர்யாவின் கனவுத் திட்டம் என்றும், அதன் முதல் முயற்சியாக ‘சீன்’ உருவாகியிருப்பதாகவும் கூறினார். படத்தின் வெளியீட்டிற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சூர்யாவின் புதுமையான கதாபாத்திரம், ஜித்து மாதவனின் தனித்துவமான இயக்கம், நஸ்ரியா மற்றும் நஸ்லெனின் நடிப்பு, சுஷின் ஷ்யாமின் இசை எனப் பல எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள ‘சீன்’, வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. துபாயில் நடைபெற்ற இந்தப் பிரத்யேக நிகழ்வு, படத்தின் விளம்பரப் பயணத்திற்கு உற்சாகமான தொடக்கமாக அமைந்துள்ளது.

 

“I’m Revealing a Side of Suriya That Fans Haven’t Seen Before!” – Actor Opens Up at Dubai Event for ‘Scene’

Directed by Jithu Madhavan, Suriya’s ‘Scene’ promises a blend of crime, mystery, comedy and family entertainment; film set for worldwide theatrical release on November 6.

Dubai: Actor Suriya’s upcoming film Scene, directed by acclaimed Malayalam filmmaker Jithu Madhavan, marked the beginning of its promotional campaign with an exclusive event at a popular shopping mall in Dubai. The event witnessed an enthusiastic response from fans, as the film’s cast and crew shared insights into the project, its unique storyline and the creative vision behind the film.

Produced by Jyotika and Suriya under the banners of 2D Entertainment and Zhagaram Studios, Scene features Suriya alongside Nazriya Nazim, Naslen, Anandraj and Lal, among others. The film is directed by Jithu Madhavan, with Vineeth Augustine handling cinematography and Sushin Shyam composing the music. Jayasri Damodaran serves as co-producer.

The film is scheduled for a worldwide theatrical release on November 6, coinciding with the Deepavali festive season.

Suriya: “My Fans’ Unconditional Love Gives Me the Courage to Experiment”

Addressing the gathering in Dubai, Suriya thanked his fans for their patience, affection and unwavering support. He revealed that working with Jithu Madhavan had been a long-standing wish and that he had not expected the opportunity to materialise so soon.

“I had always wished to work with Jithu Madhavan, but I never thought it would happen so quickly. When he began narrating the story, I started laughing within the first five minutes. I thoroughly enjoyed listening to the entire narration. As always, Jithu has created a distinctive world through Scene, and I am happy to have been part of it,” Suriya said.

Reflecting on his career, the actor noted that although he had completed 48 films over 28 years in the industry, the journey of Scene had given him a renewed sense of excitement.

“Fans expect Suriya to emerge from Saravanan. For them, I strive to be Suriya. I want to bring out the many unexplored facets of myself on screen. The unconditional love I receive from my fans gives me the courage to portray different kinds of characters.

“If I put in one per cent of effort as an actor, I receive a hundred per cent of love from my fans. I want to remain true to that love, and that is what keeps me working hard. I am grateful to all the directors and producers who have helped shape my identity as an actor,” he added.

‘Scene’ Promises Crime, Mystery and Family Entertainment

Offering a glimpse into the film’s genre, Suriya explained that Scene would not be confined to a single cinematic style.

“You can describe it as a crime thriller or a murder mystery. At the same time, it will also be a family entertainer. I believe audiences will experience something fresh and different with this film,” he said.

Suriya also praised Nazriya Nazim for her portrayal of Maya, describing her contribution to the film as outstanding. He expressed confidence that Naslen, who makes his Tamil debut with Scene, would go on to appear in many more Tamil films.

“I believe Naslen has created magic with his performance in this film. I hope he continues to be part of many Tamil projects,” Suriya said.

The actor also expressed his admiration for music composer Sushin Shyam, revealing that he was a fan of his work. He added that several members of the Malayalam film fraternity had contributed to the Tamil project, making the collaboration particularly special.

Zhagaram Studios: A New Platform for Emerging Talent

Suriya also spoke about the vision behind Zhagaram Studios, the new production banner making its debut with Scene. He explained that the initiative was established to identify emerging talent and provide opportunities for young filmmakers and creative professionals.

“Rajasekar and I have been friends since our school days, and we started 2D Entertainment together. Zhagaram Studios is a sister concern of 2D Entertainment.

“Through 2D Entertainment, we will continue producing quality films with strong entertainment value that appeal to audiences and achieve commercial success. Zhagaram Studios, however, has a different objective. We want to discover young talent with fresh ideas and give them opportunities to showcase their abilities. Scene marks the first step in that journey, and we hope to receive the audience’s love and support,” he said.

Suriya further acknowledged Jayasri Damodaran, who has been managing the Agaram Foundation for two decades and has now taken on responsibilities at Zhagaram Studios as well.

He described the new banner as a dream project and expressed hope that it would become a platform for introducing promising new talent to the industry.

Suriya’s Message to Fans: “Focus on Positive Thoughts”

Beyond cinema, Suriya shared a message about the importance of nurturing positive thinking and being mindful of social media consumption.

“Whatever you repeatedly watch on Instagram, the platform begins showing you more of the same. That is why we should spend our time and thoughts on positive things. What we focus on can influence our lives. Positive thoughts can bring happiness and peace of mind. I sincerely wish everyone success in life,” he said.

He also expressed hope that the dialogue, “You’re the best. You can do anything,” from the film would resonate with audiences both while watching the movie and after leaving the theatre.

Naslen Calls His Tamil Debut a Dream Come True

Speaking at the event, Naslen described working alongside Suriya as an unforgettable experience, particularly because he had admired the Tamil star since childhood.

“I have visited Dubai several times, but this visit is special because Scene marks my debut in Tamil cinema. I was nervous on the first day of shooting. Having the opportunity to act alongside an actor I had grown up watching felt like a dream coming true.

“I have played a different kind of character in this film, and I am grateful to Suriya, Nazriya and Jithu Madhavan for this opportunity. Please watch the film in theatres on November 6 and share your feedback with us,” he said.

Nazriya Nazim Returns to Tamil Cinema After 12 Years

Nazriya Nazim expressed happiness at returning to Dubai, where she was born, raised and educated. She also spoke about her return to Tamil cinema after a gap of 12 years.

“I am delighted to be back in Dubai. I would like to thank Jithu Madhavan for believing in me and giving me this opportunity. Working alongside Suriya has been an unforgettable experience. I hope audiences enjoy the film and have plenty of reasons to laugh,” she said.

Jithu Madhavan on the Growing Bond Between Tamil and Malayalam Cinema

Director Jithu Madhavan spoke about the increasing popularity of films across language boundaries and expressed confidence that Scene would connect with audiences beyond Tamil Nadu.

“I initially thought of speaking in Malayalam because there are many Malayalis in this part of the world. However, since I have directed a Tamil film, I should speak in Tamil as well.

“The boundaries between film industries are gradually disappearing. Audiences in Kerala watch Tamil films, while audiences in Tamil Nadu embrace Malayalam cinema. There is no longer a rigid distinction in the way people approach films based on language. I believe Scene will appeal to audiences everywhere,” he said.

Recalling Suriya’s reaction to the script, the director revealed that the actor began laughing within the first five minutes of the narration, making it clear that the story had struck a chord with him.

He urged audiences to watch the film in theatres on its opening day.

Rajasekar Pandian Calls ‘Scene’ a Promising Beginning for Zhagaram Studios

Speaking on behalf of 2D Entertainment, Rajasekar Pandian described Scene as an exciting beginning for Zhagaram Studios. While refraining from revealing too many details about the film, he assured audiences of an engaging theatrical experience featuring a different side of Suriya, along with humour and other entertaining elements.

Co-producer Jayasri Damodaran reiterated that Zhagaram Studios was built around Suriya’s vision and that Scene represented the production house’s first major step towards realising that ambition.

With Suriya’s fresh on-screen portrayal, Jithu Madhavan’s distinctive storytelling, performances by Nazriya Nazim and Naslen, and music by Sushin Shyam, Scene is shaping up to be one of the anticipated releases of the Deepavali season.

The Dubai event marks the beginning of the film’s promotional journey ahead of its worldwide theatrical release on November 6.