
தொலைக்காட்சி தொகுப்பாளராக தற்போது வந்த ரியோ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.
ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்தி வருபவர்கள்.
ஒரு கட்டத்தில் நாயகியின் மீது கழுத்தில் கை வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது அவர்களின் தைரியத்தை பார்த்த பிரபல தொழிலதிபர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார்.
அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று ராதாரவி கூறும் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு களமிறங்குகின்றனர்
ரியோ, விக்னேஷ் காந்த். அந்த மூன்று டாஸ்குகள் என்ன? அதில் உள்ள ஆபத்து என்ன? ராதாரவி ஏன் இந்த மூன்று டாஸ்குகளையும் கொடுத்தார்? குறிப்பாக உயிருக்கே ஆபத்தான அந்த மூன்றாவது டாஸ்க் பின்னணியில் ராதாரவியின் பங்கு என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
யூடியூபில் பிரபலமான ரியோ ராஜ் இந்த படத்தில் காமெடி கலந்த நாயகன் வேடத்தை ஏற்றுள்ளார். ஓரிரு காட்சிகள் தவிர நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல் தெரிகிறது. குறிப்பாக செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார்.
விக்னேஷ் ஒரு படத்தில் இருந்தால் அந்த படம் நிச்சயம் சொதப்பிவிடும் என்பதற்கு ஏற்கனவே ‘தேவ்’ ஒரு நல்ல உதாரணம். இந்த படத்தை இரண்டாவது உதாரணமாக கூறலாம். நல்ல காமெடிக்கான உருவ அமைப்பு இருந்தும் காமெடி சுத்தமாக அவருக்கு வரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே
நாயகி ஷெரின் இந்த படத்தின் கதைக்கு தேவையா? என்ற அளவில் உள்ளது. ரிப்போர்ட்டராக வரும் அவர் திடீரென நாஞ்சில் சம்பத் மகள் என்கிறார்கள், அதையும் ரகசியமாக வைத்திருக்கின்றேன் என்கிறார்கள். ஒரே குழப்பம்
நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. வாரிசு அரசியல், டெல்லி விவசாயிகள் பிரச்சனை , ஓட்டளிக்க பணம் கொடுப்பது , காட்டை அழித்து கோவில் கட்டுவது, பாத பூஜை செய்வது . கச்சத் பாத பிரச்சனை , நீட் அனிதா, #metoo, நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்று அனைத்தையும் இந்த படத்தில் முன்னிறுத்தியுள்ளனர். அதனை காமெடி கலந்த படமாக இந்த படத்தை இயக்கியுள்ளனர்.
ராதாரவி வழக்கம்போல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அழுத்தமானதாக இருந்தாலும் சாதாரணமாக ஊதித்தள்ளி விடுகிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவர் சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
ஷபீர் இசை, செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஃபென்னி ஒலிபர் படத்தொகுப்பு ஆகியவை அனைத்துமே சுமார் ரகம். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு மினிமம் பட்ஜெட் படம் என்பதால் அவருடைய முதலுக்கு மோசமிருக்காது
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் படம் முழுவதையும் மொக்கையான காட்சிகளால் லாஜிக் இல்லாமல் நிரப்பிவிட்டு கிளைமாக்ஸை மட்டும் சூப்பராக கொடுத்துள்ளார்.
படத்தின் பிளஸ் : ரியோவின் நடிப்பு, சித்து மற்றும் ராம் நிஷாந்த் ஆகியோரின் காமடி.
படத்தின் மைனஸ்: படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாகவே நகர்கிறது.
மொத்தத்தில் கடைசி இருபது நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக நிச்சயம் படத்தை பார்க்கலாம்.
