Sunday, June 21
Shadow

விஜய்க்காக இப்படியா செய்வது நிவின் பாலி செய்துவரும் முன் எச்சரிக்கை

தமிழின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வருகிறாகள் அதேபோல் மலையாளத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் நிவின் பாலி என்று அவரின் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு எங்கு போனாலும் போட்டி தான் . இப்ப இது இல்ல கதை மலையாள வருங்கால சூப்பர்ஸ்டார் தமிழ் வருங்கால சூப்பர்ஸ்டாரை பார்த்து பயமாம்

மலையாளத்தில் அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலியை கெட்டியாக பிடித்திருப்பவர் நிவின் பாலி. பிரேமம் புகழ் அல்தாப் டைரக்சனில் இவர் நடித்திருக்கும் புதிய படம் ஞங்களுடே நாட்டில் ஓரிடவேள. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஜனவரியில் விஜய்யின் பைரவா படமும் வெளியாவதால் தனது படத்தை ஒன்று டிசம்பரில் அல்லது பிப்ரவரியில் வெளியிட உத்தரவிட்டுள்ளாராம் நிவின்.

விஜய் படம் வெளியானால் தன் பட கலக்ஷனில் பாதிப்பு வந்துவிடுமோ என அவர் அஞ்சுகிறாராம். ‘இளையதளபதி’ விஜய்க்கு தமிழில் இருக்கும் அதே அளவு மவுசு கேரளாவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply