Monday, August 10
Shadow

70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… ஒரே ஒரு மனிதர்! ஆக்ஷன் காட்சிகளுடன் ஆச்சரியப்படுத்த வரும் ‘ONE MAN’ – ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில்

70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… ஒரே ஒரு மனிதர்!

ஆக்ஷன் காட்சிகளுடன் ஆச்சரியப்படுத்த வரும் ‘ONE MAN’ – ஆகஸ்ட் 21 முதல் திரையரங்குகளில்

ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு தனி மனிதனால் செய்து முடிக்கக்கூடிய எளிய பணியல்ல. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலி வடிவமைப்பு என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இந்த வழக்கமான சினிமா நடைமுறைக்கு முற்றிலும் மாறாக, ஒரு திரைப்படத்துக்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை ஒரே மனிதர் செய்து முடித்திருக்கிறார்.

அதுதான் சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியுள்ள ‘ONE MAN’ திரைப்படம்.

ஒரு படத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொரு துறைக்கும் பல உதவியாளர்கள் பணியாற்றுவது வழக்கம். ஆனால், ‘ONE MAN’ திரைப்படத்தின் தொடக்கம் முதல் இறுதிக்கட்டப் பணிகள் வரை, எந்தவித உதவியாளர்களின் துணையும் இல்லாமல் பல்வேறு பொறுப்புகளை சங்ககிரி ராஜ்குமாரே தனி மனிதராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளார்.

ஒரு மனிதர் இத்தனை பணிகளை செய்துள்ளார் என்பதே இந்தப் படத்தின் முதல் ஆச்சரியம் என்றால், அந்த உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் எந்தவிதத்திலும் ஒரு பரிசோதனை முயற்சியாக மட்டும் நின்றுவிடவில்லை என்பதுதான் அடுத்த ஆச்சரியம்.

ஹெலிகாப்டரை மையமாகக் கொண்ட பரபரப்பான சேசிங் காட்சி, ஒரு ரயில் மற்றொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங், பிரம்மாண்டமான அருவியில் குதித்து ஐந்து பேர் உயிர் தப்பும் காட்சி என பல ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால், தனி மனிதனால் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற அடையாளத்தைக் கடந்து, ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படத்திற்கான அனுபவத்தை வழங்கும் வகையில் ‘ONE MAN’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.

ஒருவரே பல கதாபாத்திரங்கள்… ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்!

இந்தப் படத்தின் மற்றொரு வித்தியாசம், இதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருப்பதுதான்.

ஒரே நடிகர் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்ற எண்ணம் படம் பார்க்கும்போது ஏற்படாத அளவுக்கு, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி குணாதிசயங்களுடன் உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு கதாபாத்திரத்திடமிருந்து மற்றொரு கதாபாத்திரம் எப்படி தப்பிக்கும்? ஒருவரால் இன்னொருவருக்கு என்ன பிரச்சனை ஏற்படும்? அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது? என்ற கேள்விகளை எழுப்பும் வகையில் திரைக்கதை நகர்வதாகவும், ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்புக் காட்சியைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர்.

இதனால், ‘ஒரே மனிதர் உருவாக்கிய படம்’ என்ற ஆச்சரியத்தைத் தாண்டி, ‘என்ன நடக்கப்போகிறது?’ என்ற ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

திரைப்படத்தை எடுத்த விதத்தையும் பதிவு செய்த ‘ONE MAN’

இந்த முயற்சியில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம், திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு உருவாக்கினார் என்பதை சங்ககிரி ராஜ்குமார் தனியாக மற்றொரு கேமரா மூலம் பதிவு செய்து வைத்திருப்பதாகும்.

அதாவது, திரைப்படம் மட்டுமல்லாமல், அந்தத் திரைப்படம் எப்படி ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கான முழுமையான பயணமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சினிமாவில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஒரு படத்தை உருவாக்குவது வழக்கமாக இருக்கும் நிலையில், அந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் தனக்குள் ஒருங்கிணைத்து செயல்பட்டிருப்பது ‘ONE MAN’ திரைப்படத்தை ஒரு வித்தியாசமான முயற்சியாக மாற்றியுள்ளது.

“திருவிழா படமாக மட்டும் இருக்காது…”

ஒரே ஒருவர் உருவாக்கிய படம் என்ற தகவலைக் கேட்டதும், இது திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்பட்ட பரிசோதனைத் திரைப்படமாக இருக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு கூறுகிறது.

சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள், சங்ககிரி ராஜ்குமாரின் தனி மனித உழைப்பை பாராட்டியதுடன், படத்தின் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு மற்றும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் விதம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர்.

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி நடிகர்கள், நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் என பிரம்மாண்டமான சினிமா உருவாக்கங்களுக்கிடையே, எந்தவிதமான பெரிய பின்புலமும் இல்லாமல் ஒரு தனி மனிதராக இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருப்பது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்

தான் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சியை ரசிகர்கள் ஒரு வித்தியாசமான சாதனையாக மட்டும் பார்க்காமல், ஒரு தமிழனின் விடாமுயற்சியாகவும், சினிமா மீதான அர்ப்பணிப்பாகவும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனின் கனவாக உருவான ‘ONE MAN’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் படக்குழு உள்ளது.

70-க்கும் மேற்பட்ட சினிமா பணிகள்… பல கதாபாத்திரங்கள்… பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள்… இவை அனைத்தையும் ஒரே மனிதன் உருவாக்கியிருக்கிறார் என்ற வித்தியாசமான அடையாளத்துடன் ‘ONE MAN’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Over 70 Film Roles… One Man!

‘ONE MAN’ Set to Impress with High-Octane Action Sequences – In Theatres from August 21

Filmmaking is typically a collaborative art form that requires specialists across multiple departments—story, screenplay, direction, acting, cinematography, editing, music, sound design, and more. In a striking departure from this conventional model, one individual has independently undertaken more than 70 distinct film-related roles involved in the making of a feature film.

That individual is Sankagiri Rajkumar, the creator of the film ‘ONE MAN’.

In standard film productions, each department is supported by dedicated teams and assistants. However, from inception to completion, Sankagiri Rajkumar has single-handedly managed and executed multiple key responsibilities without external assistance.

While the scale of this achievement is remarkable in itself, the film that has emerged from this effort is far from a mere experimental project.

The film features high-intensity sequences including a helicopter chase, a dramatic train collision, a car chase filmed in the United States, and a visually striking waterfall sequence involving five characters surviving a leap. According to the team, ‘ONE MAN’ transcends its identity as a one-person production and delivers a full-scale commercial action experience.

One Man, Multiple Characters… Yet Each Distinctly Defined

Another notable aspect of the film is that Sankagiri Rajkumar has portrayed all the characters.

Audiences are expected not to perceive repetition, as each character has been carefully crafted with distinct traits, behavior, and individuality.

The screenplay is designed to sustain curiosity by exploring how one character interacts with or escapes from another, the conflicts that arise between them, and the unfolding consequences. Industry insiders who have viewed a special screening have commended the film’s ability to consistently build anticipation from scene to scene.

As a result, beyond the novelty of a “one-man film,” there is also strong interest in the narrative progression and its unfolding events.

‘ONE MAN’ – A Film and Its Making Captured in Parallel

A further distinguishing feature of the project is that Sankagiri Rajkumar has independently documented the entire filmmaking process using a separate camera.

This means that not only the feature film itself, but also the complete journey of its creation by a single individual, has been recorded in detail.

While filmmaking traditionally involves coordination among multiple departments, the consolidation of all processes under one individual makes ‘ONE MAN’ a unique cinematic experiment.

“More Than an Experimental Film”

Although the concept of a one-man production may initially suggest an experimental or festival-oriented film, the team emphasizes that the scale and execution of the action sequences redefine that perception.

Those who attended special screenings have appreciated Sankagiri Rajkumar’s commitment, particularly highlighting the story, screenplay structure, visual execution, and the sustained narrative tension across scenes.

In an industry dominated by large-scale productions, established stars, and extensive technical crews, this ambitious project—realized without major studio backing—has attracted considerable attention.

Worldwide Theatrical Release on August 21

Sankagiri Rajkumar expresses confidence that audiences will view the film not only as a remarkable individual achievement but also as a testament to perseverance and dedication to cinema.

The team hopes that ‘ONE MAN’, born from a single creator’s vision, will receive the same level of appreciation and support as major star-driven productions.

With over 70 film roles, multiple characters, and large-scale action sequences—all created by one individual—‘ONE MAN’ is set for a worldwide theatrical release on August 21.