Wednesday, November 30
Shadow

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுலை 4 திங்கள் குடும்பப் பிணைப்பை சித்தரிக்கும் ‘பச்சைக்கிளி’

 

குடும்பங்கள் என்ற கருத்தமைவு மீது மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட இரு நபர்களின் சுவாரஸ்யமான ஒரு கதையான ‘பச்சைக்கிளி’, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜுலை 4 திங்கள் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ~

சென்னை, 23 ஜுன் 2022: திருமண உறவின் மதிப்பீடுகள், குடும்ப பிணைப்புகள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்கின்ற ஒரு புத்தம் புதிய நெடுந்தொடரான பச்சைக்கிளி, ஜுலை 4 திங்கள் முதல், கலர்ஸ் தமிழில் தொடங்கவிருக்கிறது. பச்சைக்கிளி என்ற ஒரு கிராமப்பெண் (நடிகை மோனிஷா அர்ஷக் நடிப்பில்) மற்றும் ஆதித்யா என்ற இளைஞனின் (நடிகர் தீபக் நடிப்பில்) வாழ்க்கையை சித்தரிக்கும் இந்நெடுந்தொடர், குடும்பம் மற்றும் திருமணம் மீது நேர்மாறான கண்ணோட்டத்தையும், கொள்கைகளையும் கொண்டிருக்கும் போதிலும், இந்த இரண்டு தனிநபர்களும் எப்படி ஒருங்கிணைகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஜூலை 4-ம் தேதி திங்களன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இத்தொடர், வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும். பச்சைக்கிளி மற்றும் ஆதித்யாவின் சுவாரஸ்யமான இப்பயணத்தை பின்தொடர கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

அழகும்,விவேகமும் நிறைந்த இளம் பெண்ணான பச்சைக்கிளி, அவளது மூன்று சகோதரர்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (நடிகர் விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (நடிகர் அஸ்வின்) ஆகியோரின் பேரன்புக்கு உரியவளாக இருக்கிறாள். அதிக செல்லத்தோடும், அன்போடும் வளர்ந்திருக்கும் பச்சைக்கிளி அவளது உறவுகளை கண்போல மதிப்பவள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் பச்சைக்கிளியின் வாழ்க்கை குடும்ப பிணைப்புகளையோ, திருமண பந்தங்களையோ சிறிதளவும் மதிக்காத ஆதித்யா என்ற பிரபல வழக்கறிஞரை சந்திக்கும்போது ஒரு அதிரடி மாற்றத்தை சந்திக்கிறது. விவாகரத்து வழக்குகளை எடுத்து வாதாடுவதால் ஆதித்யாவிற்கு நல்ல பெயர் இல்லை. அவனது சொந்த குடும்பத்தில் உறவுகள் சரியாக இல்லாததே இதற்குக் காரணம். ஒவ்வொரு திருமண பந்தமும், இணைப்பும் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கிறது என்ற கருத்தமைவை அடித்தளமாகக் கொண்ட ஒரு காதல் கதையான பச்சைக்கிளி, எதிரெதிர் துருவங்களான இந்த இரு நபர்கள் சந்திக்கும்போது நிகழும் மோதல்கள் மற்றும் சிரிப்பூட்டும் நிகழ்வுகளினால் பார்வையாளர்களை நிச்சயம் பரவசப்படுத்தும்.

கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இந்நெடுந்தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாவது குறித்து கூறியதாவது: “தனித்துவமான கருத்தாக்கங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச்செல்வது என்ற எமது கோட்பாட்டையொட்டி எமது புதின நெடுந்தொடர் அணிவரிசையில் பச்சைக்கிளி என்ற இப்புதிய நிகழ்ச்சியையும் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குடும்பங்களை இன்னும் நெருக்கமாக கொண்டு வருவதில் பெண்கள் ஆற்றுகின்ற சிறப்பான பங்குகளையும் மற்றும் எந்தவொரு உறவு முறையிலும் அவர்கள் எப்படி வலுவான தூண்களாக இருக்கின்றனர் என்பதையும் மீண்டும் ஒருமுறை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டும் கருத்தியல் ரீதியிலான வேறுபாடுகளின் காரணமாக பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் எதிர்கொண்ட பிறகும் கூட சில திருமணங்கள் எப்படி ஜெயிக்கின்றன என்று காட்டுவதற்கு பச்சைக்கிளியின் மூலம் நாங்கள் முயற்சிக்கிறோம். இரத்த உறவுகளை பார்வையாளர்கள் மதித்துப் போற்றுவதையும் மற்றும் திருமண அமைப்பையும் இந்நிகழ்ச்சி ஊக்குவிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

இத்தொடரின் இயக்குனர் ஜவஹர் பேசுகையில், “தனது உறவுகளைப் பராமரிக்கவும் திருமண வாழ்க்கையைத் தொடரவும் அதிக சவாலான சூழ்நிலைகளைக் கூட தனது மனவுறுதியால் வெற்றி காண்கின்ற ஒரு பெண்ணின் கதை இது. இந்நிகழ்ச்சியின் கதையமைப்பு, கதாபாத்திர உருவாக்கத்தின் மீது அதிக முக்கியத்துவம் தருவதாகவும் மற்றும் மனதை ஒன்றவைப்பதாகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடின் கடைசி வினாடி வரை பார்வையாளர்களின் கவனத்தை இது நிச்சயம் முழுமையாக தன்வசப்படுத்தியிருக்கும். இத்தொடரின் ஒட்டுமொத்த உருவாக்கம், எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு தருணத்தையும் பார்வையாளர்களும் பெரிதும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகை மோனிஷா அர்ஷக், “ஸ்மார்ட்டான ஆனால், உறுதியான முடிவெடுக்கும் ஒரு பெண்ணாக பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எந்தவொரு சூழ்நிலையாக இருப்பினும், அதிலிருந்து வெள்ளிகரமாக வெளியே வரத் தெரிந்திருக்கும் இப்பெண், கடும் தடைகளும், சிரமங்களும் எதிரே வந்தாலும் ஒருபோதும் தனது முடிவிலிருந்து மாறுவதில்லை; மனம் தளர்வதில்லை. ஒரு கதாபாத்திரமாக, தங்களது உறவுகளையும், பாசப்பிணைப்புகளையும், கொள்கைகளையும் மிகவும் மதிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் பச்சைக்கிளி பிரதிபலிக்கிறாள். தங்களைச் சுற்றியுள்ள அனைவரின் நிபந்தனையற்ற அன்பைப் பெற்றிருக்கின்ற மற்றும் பிறர் மீது அக்கறை கொண்டிருக்கின்ற பெண்கள் ஏராளமாக இருக்கின்றனர். இக்கதாபாத்திரத்தின் எளிமையான தன்மையின் காரணமாக பார்வையாளர்கள் இதனோடு எளிதில் ஒன்றிப்போவார்கள் என்று நான் கருதுகிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுடன் இதுதான் எனது முதல் ஒத்துழைப்பு உறவு என்று நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வித்தியாசமான மற்றும் சிறப்பான கருத்தாக்கத்தைக் கொண்ட இத்தொடரில் இடம்பெற்றிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

பச்சைக்கிளி மற்றும் ஆதித்யா ஆகிய இருவருக்குமிடையே சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் மீதான மோதலைக் காண ஜுலை 4 முதல் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.