
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், அதிதி ராவ் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பல்வேறு பிரபலங்கள் இப்படத்தின் ட்ரைலரின் பிரமாண்டத்தை பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர். ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் ட்ரெண்ட் ஆகி முதல் இடத்தை பிடித்தது.
மிக வைரலான இந்த ட்ரைலரை youtubeல் ஒரே நாளில் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
பாலிவுட் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு பேர் பார்த்தது இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்து உள்ளது. இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்து உள்ளார்.