Sunday, April 26
Shadow

Tag: #padmavathy #deepikapadukon #ranveersing #shakithkapoore

பத்மாவதி வெளியானால் வன்முறை வெடிக்கும் இந்து கலாச்சார அமைப்புகள் எச்சரிக்கை!

பத்மாவதி வெளியானால் வன்முறை வெடிக்கும் இந்து கலாச்சார அமைப்புகள் எச்சரிக்கை!

Latest News
பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர உள்ள பத்மாவதி திரைப்படத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குஜராத்தில் இந்து அமைப்பினர் இன்று பிரம்மாண்ட கண்டன பேரணியை நடத்தினர். விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் படத்தை தடை செய்ய வலியுறுத்தி குஜராத் மாநிலம் சூரத்தில் விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ராஜபுத்திர இனத்தவர்களுடன் சேர்ந்து பிரம்மாண்ட கண்டன பேரணியை மேற்கொண்டனர். இந்து கலாச்சாரத்திற்கு எதிரான இந்த படம் வெளியிடப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்...
இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் ஒரே நாளில் முறியடித்த பத்மாவதி ட்ரைலர்!

இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் ஒரே நாளில் முறியடித்த பத்மாவதி ட்ரைலர்!

Latest News
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், அதிதி ராவ் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பல்வேறு பிரபலங்கள் இப்படத்தின் ட்ரைலரின் பிரமாண்டத்தை பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர். ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் ட்ரெண்ட் ஆகி முதல் இடத்தை பிடித்தது. மிக வைரலான இந்த ட்ரைலரை youtubeல் ஒரே நாளில் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். பாலிவுட் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு பேர் பார்த்தது இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்து உள்ளது. இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்து உள்ளார்....