![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2024/11/Gc_F4KHbcAA1zxn-1024x683.jpg)
சமீப காலமாகா மலயாள படங்களுக்கு தமிழில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மீண்டும் ஒரு சிறந்த மலயாளதில் இருந்து தமிழிலில் மொழி மாற்றம் செய்து வெளியாகியிருக்கும் படம் பணி
மலையாள உலகில் மிகப்பெரும் நடிகரான ஜோஜூ ஜார்ஜ், முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் பணி.இப்படத்தில், ஜோஜூ ஜார்ஜ், அபிநயா, ஜோஜூ ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, சீமா, ப்ரஷாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
படத்திற்கு வேணு, ஜிண்டோ ஜார்ஜ் இருவரும் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு விஜய், சாம் சி எஸ் இருவரும் இசையமைத்துள்ளனர்.
மலையாளத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தமிழில் டப் செய்யப்பட்டு நாளை தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. ஜோஜூ ஜார்ஜ் நடிப்பிற்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம் இருப்பதால், இங்கும் படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்பார்ப்பினை இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைக்குள் போகலாம் …
மெக்கானிக் செட் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் (சாகர் சூர்யா & ஜுனாய்ஸ்) வேலை பார்த்து வருகின்றனர். ஓனரிடம் லீவ் சொல்லிவிட்டு செல்லும் இருவரும் ஒருவரை குத்தி கொலை செய்கின்றனர்.
அதன்பிறகு, ஜோஜூஜார்ஜின் மனைவியாக வரும் அபிநயாவிடம் சீண்டுகிறார் சாகர் சூர்யா. இதனால் கோபம் கொண்ட ஜோஜூ ஜார்ஜ், இருவரையும் சரமாரியாக அடித்து விடுகிறார்.
இதனால் வெறியான இருவரும் ஜோஜூ ஜார்ஜையும் அவரது மனைவியாக வரும் அபிநயாவையும் பழிவாங்க நினைக்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன் ஜோஜூ ஜார்ஜும் அவரது நண்பர்களும் மிகப்பெரும் ரெளடியாக வலம் வந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு அனைவரும் அமைதியான வாழ்வை வாழத் துவங்கியவர்கள். தனது மனைவி மீது அளவு கடந்த காதல் வைத்திருப்பவர் ஜோஜூ.
ஜோஜூ ஜார்ஜ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிற்குள் சென்று அபிநயாவிடம் பாலியல் சீண்டல் செய்து விடுகின்றனர் சாகர் சூர்யாவும் அவனது நண்பர் ஜூனாய்ஸும். இதனால், இருவரையும் கொல்ல நினைக்கிறார்கள் ஜோஜூ ஜார்ஜும் அவரது நண்பர்களும்.
சீனியர் தாதாக்களுக்கும் ஜூனியர் ரெளடி இருவருக்கும் நடக்கும் பழிவாங்கும் படலமே இந்த பாணி படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. தனது கண் பார்வையிலும், உடல் மொழியிலும் தனக்கே உரித்தான மாஸ் அதிரடி ஆக்ஷனில் பட்டையை கிளப்பியுள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
கார் இயக்கும் ஸ்டைலில் படம் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இவருக்கு துணையாக நடித்திருக்கும் அபிநயாவின் நடிப்பும் டாப் க்ளாஸ். அழகிலும் நடிப்பிலும் கட்டிப் போடுகிறார் அபிநயா.
வில்லன்களாக நடித்திருக்கும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இருவரும் படத்திற்கு மிகப்பெரும் பலம். இளம் வயதாக இருந்தாலும் தங்களது நடிப்பில் ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மிரட்டலாக நடித்திருப்பதால் தான் ஜோஜூ ஜார்ஜின்ன் ஹீரோயிசம் பலம் வாய்ந்ததாக இருந்தது.
தனது முதல் இயக்கத்திலும் இப்படி அதிவேகமான திரைக்கதை அமைத்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். பெண்களை தொட்டால் என்ன நடக்கும் என கூறும் இடத்தில் கைதட்டல் கொடுக்க வைக்கிறார்..
பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஒளிப்பதிவு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில், பணி – குளுமை 4/5