Sunday, May 19
Shadow

விவேக பாரதி இயக்கத்தில் விக்னேஷ் நடிக்கும் “பாசக்கார பய” பொங்கல் திருநாளில் வெளியாகிறது!

….
விவேக பாரதி இயக்கியுள்ளார்

தன்னை காதலிக்காவிட்டாலும் வேறு ஒருவரை காதலிப்பதை பெருமையாக நினைக்கும் காதலி,
தன் சகோதரி மகளின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடும் மாமனின் கருணை உள்ளம். இவ்வாறு காதல் ரசம் சொட்ட குடும்ப பாங்கான கதையாக கொண்டு உருவாகியுள்ள படமே பாசக்கார பய.

காயன்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க காயத்திரி கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக பிரதாப் நடிக்க கஞ்சா கருப்பு, தேனி முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு. கே.வி மணி
இசை – சௌந்தர்யன்
பாடல்கள்-அறிவுமதி. டாக்டர். கிருதியா, செங்கதிர்வாணன்

செளந்தர்யன் இசையில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுன

சிஞ்சனக்கன செனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி…என்ற பாடல் குத்தாட்டம் போடவைக்கும்.

தஞ்சை, மயிலாடுதுறை காவிரி டெல்டா பகுதியை அற்புதமாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி.மணி.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-

விவேகபாரதி

இப்படம் பொங்கல் (ஜனவரி 14) தினத்தன்று வெளிவருகிறது.

– வெங்கட் பி.ஆர்.ஓ