Sunday, May 19
Shadow

“பத்து தல” – திரை விமர்சனம்! மாஸ் (ரேங்க் 4/5)

 

எப்படி இருக்கிறது சிம்புவின் “பத்து தல” – திரை விமர்சனம்!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்து தல இன்று வெளியாகியுள்ளது. இதன் இவன் விமர்சனத்தை பார்க்கலாம்.

தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் சந்தோஷ் பிரதாப், துணை முதல்வர் கௌதம் மேனன். இருவருக்கும் செட் ஆகாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல் மாஃபியாவாக இருப்பவர் சிம்பு. தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை சிம்பு தான் முடிவு செய்வார். அவ்வளவு பலம் வாய்ந்தவர். ஒருநாள் தமிழக முதல்வர் கடத்தப்படுகிறார். ஒருவருடம் ஆகியும் எதுவும் தெரியாததால் போலீஸ் கௌதம் கார்த்திக்கை சிம்புவின் கூடாரத்துக்குள் மோப்பம் பிடிக்க அனுப்புகிறது காவல்துறை. அதே ஊரில் தாசில்தாராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இதற்கிடையே ஏஜிஆரான சிம்புவுக்கும் துணை முதல்வரான கௌதம் மேனனுக்கும் மோதல். இறுதியில் காணாமல் போன முதல்வர் என்ன ஆனார்? கௌதம் மேனனுக்கும் சிம்புவுக்குமான பிரச்சினை என்ன ஆனது? கௌதம் கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தாரா? என்பதே பத்து தல.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தை தமிழில் பத்து தலயாக கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. சிம்புதான் பிரதானம் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு இடைவேளை வரும்போது தான் அவரும் வருகிறார். அதுவரை அவ்வப்போது கை, கால்களை மட்டுமே காட்டி கடுப்பேத்துகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு சிம்பு ராஜ்ஜியம் தான். முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். நிச்சயம் கம்பேக் சிம்பு தான். இதே பாதையில் பயணித்தால் நலம். கௌதம் கார்த்திக் அண்ட்கவர் போலீசாக அசால்ட்டாக நடித்துள்ளார். அவரது சினிமா கேரியரில் இதுவொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. முதல் பாதியை தாங்குவது இவர்தான். பிரியா பவானி சங்கர் தாசில்தாராகவும் கௌதமின் முன்னாள் காதலியாகவும் வந்து செல்கிறார். படத்தில் வில்லன் சிம்பு அவருக்கு வில்லன் கௌதம் மேனன். அட்டகாசம் செய்துள்ளார். இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வேகத்தடை தான். பின்னணி இசை சில இடங்களில் பெரிதாக கவரவில்லை. சிம்புவை ஆரம்பத்தில் இருந்து காட்டியிருந்தால் களைகட்டியிருக்கும். அவருக்கான மாஸ் காட்சிகளும் குறைவுதான். சும்மா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வருவது. ஸ்லோமோஷனில் நடப்பதை மட்டுமே காட்டியுள்ளனர். திரைக்கதையில் இன்னும் கமர்ஷியல் சேர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கி ஏந்திய அத்தனை பேருடன் தனி ஆளாக ஹீரோ சண்டையிடுவது எல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இயக்குனர் கிருஷ்ணாவின் முயற்சிக்கு பாராட்டுகள்.

படத்தின் முதல் பகுதி கொஞ்சம் மெதுவாக செல்லும் நேரத்தில் சாயிஷா அயிட்டம் டான்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் சாயிஷா கவர்ச்சியை விட அவரின் அழகு ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். மீண்டும் நாயகியாக நிச்சயம் தமிழ் சினிமாவில் வலம் வருவார்

படத்தின் இன்னொரு பலம் கெளதம் கார்த்திக் நம்மை வியப்பில் ஆழ்த்துகிரார் நடிப்பில் புலிக்கு பிறந்ததu பூனையாகாது என்பதை நிரூபித்து உள்ளார். முதல் பகுதியை பொறுத்த வரைக்கும் அவர் தான் ஹீரோ சண்டை காட்சிகளிலும் நம்மை பிரமிக்க வைக்கிறார்.