
“மரம் வளர்ப்பது மட்டும் போதாது; அதை காப்பதே உண்மையான சுற்றுச்சூழல் சேவை” – நடிகர் சௌந்தரராஜா வலியுறுத்தல்
சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை முறையாகவும் மாற வேண்டும் என்று நடிகர் சௌந்தரராஜா வலியுறுத்தியுள்ளார்.
சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் நடிகர் சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” மூலம் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகள் சீரமைத்தல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அறக்கட்டளையின் சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக சென்னை வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வாடிவரும் மரங்களை காப்பதற்கான இந்த நடவடிக்கை, பொதுமக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய நடிகர் சௌந்தரராஜா, “மரங்களை நட்டுவிடுவது மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்ல. அவை வளர்ந்து நிழல் தரும் வரை பராமரிப்பதும் நமது கடமையாகும். இன்று காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இயற்கையை பாதுகாக்கும் பணியில் அரசு மட்டுமல்ல, பொதுமக்களும் நேரடியாக பங்கேற்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் எதிர்கால சந்ததியினருக்கான முதலீடாகும்” என்று தெரிவித்தார்.
இந்த சமூகப் பணியில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று மர பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை செயல்பாட்டின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் இந்த முயற்சி, சமூகத்தில் நல்ல மாற்றத்திற்கான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

“Planting Trees Alone Isn’t Enough; Protecting and Nurturing Them Is the Real Environmental Service” – Actor Soundararaja
Protecting the environment is not solely the responsibility of the government; it must become a way of life for every citizen, emphasized actor Soundararaja.
Known for his strong commitment to social causes, Soundararaja has been actively involved in environmental conservation, sustainable agriculture, and community welfare initiatives through his “Mannukkum Makkalukkum Foundation” for several years. The foundation has been carrying out a range of impactful activities, including tree plantation drives, restoration of lakes and ponds, cleanliness campaigns, and environmental awareness programs.
To mark World Environment Day, the foundation undertook a special initiative over the past two weeks to water and maintain roadside trees in the Vadapalani and Virugambakkam areas of Chennai. The effort aimed to protect young trees from the harsh summer heat and ensure their healthy growth, earning appreciation from local residents.
Speaking about the initiative, Soundararaja said, “Environmental protection does not end with planting saplings. Our responsibility continues until those trees grow strong enough to provide shade and sustain life. Today, climate change has become a major global challenge. Preserving nature requires active participation not only from governments but also from every individual. Protecting the environment is an investment in the future of coming generations.”
Several members and volunteers of the foundation enthusiastically participated in the tree-care campaign, contributing their time and efforts to the cause. Through such meaningful initiatives, the foundation continues to spread environmental awareness and inspire communities to take collective responsibility for safeguarding nature.
