Sunday, May 19
Shadow

பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத் குமார் என பலர் நடித்துள்ளனர். தங்களது மன்னர்களைக் கொன்றதால் சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் ஒருபுறம், அதிகாரப் போட்டியின் காரணமாக தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சோழ வம்சம் மறுபுறம் என நகர்வதே இத்திரைப்படம். மன்னர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த நிலப்பரப்பை காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன்.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் சந்தித்துள்ளது. நாவலுக்கென்று இல்லாத வர்ணனை கட்டுப்பாடு காட்சி மொழிக்கு பொருந்தாததால் முக்கியமான காட்சிகளை சொல்லியே ஆகவேண்டும் எனும் கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவை சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி திரைப்படத்தைப் பார்க்கும்போது எழுகிறது.

பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களத்தில் யார் யாருக்கு என்னென்ன பாத்திரம்? எதற்காக குறிப்பிட்ட கதாபாத்திரம் இப்படி நடந்து கொள்கிறது? இதற்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விகள் முழுமையான விடை கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்தினம் படத்தின் முதல் காட்சியில் விக்கரம் அறிமுகமே நமக்கு ஒரு வித பிரமிப்பை நமக்கு உண்டாக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். படத்தின் அழகு ஒவ்வரு கதாபாத்திரத்தின் அமைப்பு.

படத்தின் பிளஸ்:
இசையும், கேமிரா, கதாபாத்திரங்கள் தேர்வு. இந்தியனின் பெருமையை உலகத்துக்கு பறைசாற்றும் வகையில் உலக படங்களுக்கு சாவல் விடும் படமாக அமைத்துள்ளது தமிழன் பெருமையை மட்டும் இல்லை தமிழ் சினிமாவின் தரத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை நிருபிக்கும் படமாக அமைந்துள்ளது நமக்கு பெருமை ஏ.ஆர்.ரகுமான் இசையும் ரவிவர்மன் ஒளிப்பதிவும் நமக்கு மிக பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. உலக சினிமாவைசிநிமாவுக்கு சாவல் விடும் திறமையை கொடுத்துள்ளனர்.

இந்திய சினிமாவுக்கு ஒரே தலை சிறந்த  இயக்குநர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார் இயக்குநர் மணிரத்தினம் ஒவ்வொரு காட்சிகளில் நமக்கு பிரமிப்பை கொடுத்துள்ளார்.

இரண்டாம்பாகத்தின் லீட்

படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் ஒவ்வொரு நடிகர்களும் குறிப்பாக கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் நமக்கு பிரமிப்பை உண்டுபன்னியுள்ளனர் .

பொன்னியின் செல்வன் நமக்கு பெருமை உலகுக்கு பெருமை.

மொத்தத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் இனிவரும் திரை முயற்சிகளுக்கு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.