
“சீறும் புலிகள்” படம் குறித்து ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் ஜி. வெங்கடேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றான “சீறும் புலிகள்” படத்தின் கதாநாயகனை கண்டெடுத்தோம். பல நாட்கள் தேடலுக்கு பின் எங்கள் தலைவரின் சாயலில் ஒரு கலைஞனை கண்டெடுத்தோம். இதை மிகிழ்சியாக தெரிவித்து கொள்கிறோம். படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், பிரபாகரனை உங்கள் முன்னிறுத்தும் நேரம் வெகு அருகில் உள்ளது என்று குறிப்பிடப்பத்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சோபியாவை கைது செய்ததற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
