Tuesday, December 3
Shadow

பி.டி.சார் – திரைவிமர்சனம்! Rank 3/5

பி.டி.சார் திரைவிமர்சனம்!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பி‌.டி.சார் படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். தியாகராஜன் ஈரோட்டில் கல்வித் தந்தையாக பெரிய மனிதராக இருப்பவர். அவரது பள்ளியில் ஆதி பி.டி. சாராக பணிபுரிகிறார். அதே பள்ளியில் டீச்சராக இருக்கும் காஷ்மீராவை காதலிக்கிறார். ஆதி பயந்த சுபாவம் கொண்டவர். அநியாயம் நடந்தால் வேடிக்கை மட்டும் பார்ப்பவர். ஆதியின் பக்கத்து வீட்டு இளவரசுவின் மகள் அனிகா தியாகராஜனின் கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே நாள் இரவு சாலையில் நடந்துவரும் அனிகாவிடம் சிலர் தவறாக நடந்து கொள்கின்றனர். இதனை வீட்டில் சொன்னால் பெற்றோர் அனிகாவை திட்டி அடிக்கின்றனர். அந்த தெருவே அனிகாதான் தவறு செய்ததாக பார்க்கிறது. இதனால் மனமுடைந்த அனிகா தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அனிகா கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கிறார் ஆதி. அதற்கான காரணம் என்ன? அனிகா எப்படி இறந்தார்? குற்றவாளிகள் யார் ? என்பதே இப்படத்தின் கதை.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை பற்றி பேசுகிறது இப்படம். அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். ஆதி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னும் சில இடங்களில் அவரது நடிப்பில் முன்னேற்றம் வேண்டும். காஷ்மீரா அழகாக இருக்கிறார்‌. ஆனால் படத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைவு. படத்தின் மிகப் பெரிய பலம் ஆதி மற்றும் அனிகாவின் நடிப்பு தான். மேலும் அனிகாவின் அப்பாவாக நடித்துள்ள இளவரசுவின் நடிப்பு பிரமாதம்.

பிரபு, மதுவந்தி, தேவதர்ஷினி, பாக்யராஜ் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆதியின் இசையில் இது 25 படம் . ஆனால் பாடல்கள் சுமார். பின்னணி இசை நன்றாக உள்ளது. வில்லனாக தியாகராஜன் மிரட்டல். ஆனாலும் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சமுதாயத்தில் பெண்கள் தினமும் படம் துயரங்கள் பற்றி படம் எடுக்க நினைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதனை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருக்கலாம். இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் நன்றாக ஒர்க்ஆகியுள்ளது. நாயகனுக்கு தேவையில்லாத பில்டப் கொடுத்துள்ளதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் பி.டி.சார் – ஜஸ்ட் பாஸ். ரேட்டிங் 3/5