
பப்ஜிக்கு இணையாக FAU G என்ற புதிய விளையாட்டு செயலி அறிமுகப் படுத்தப்பட உள்ளதாம். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வழிகாட்டுதலின்படி, இந்த புதிய விளையாட்டு செயலி உருவாக்கப்படிருக்காம். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்ஷய் குமார், “பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், ஒரு மல்டிபிளேயர் அதிரடி விளையாட்டை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன், இளைஞர்கள் இதனை விளையாடுவதன் மூலம் அச்சமற்ற ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள்” என்று தெரிவிச்சிருக்கார். அக்டோபர் மாத இறுதியில் இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த செயலியின் வருவாயில் 20% பணத்தை பிரதமரின் பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் அப்படீன்னும் அக்ஷய் குமார் சொல்லி இருக்கார்