Saturday, April 18
Shadow

ராகு – கேது தோஷம் ஏற்படுவது ஏன்?

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோஷங்கள் இருக்கும். அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தோஷங்களில் ஒன்றான இராகு கேது தோஷம் எதனால் ஏற்படுகின்றது என பார்ப்போம். நம் மூதாதையர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் தற்போது தோஷமாக உருவெடுத்துள்ளது என சாஸ்திரங்கள் கூறுகின்றது.

நம் மூதாதையர்கள் பல்வேறான உதவிகள் செய்து புண்ணியங்களை நமக்கு தேடிக் கொண்டிருந்திருந்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு செய்த சில பாவங்களை எடுத்துக் காட்டவே அடுத்த தலைமுறையினருக்கு ராகு கேது தோஷம் ஏற்பட ஒரு காரணமாக அமைகின்றது.

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தடுக்கவும், களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது.

கோவில் இடங்களை ஆக்கிரமித்து ஆண்டவனின் கோபத்திற்கு ஆளானதால் இந்த தோஷம் ஏற்படலாம்.

தம்பதிகளை ஏதேனும் பகையால் பிரித்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு இந்த தோஷம் ஏற்படலாம்.

மூதாதையர்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, அக்குழந்தைகள் விட்ட ஒவ்வொரு துளி கண்ணீரும் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷமாக விஸ்வபரூபம் எடுக்கும்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கியதினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டத்தில் கேதுவுமாக இருந்து மூன்றாவது தலைமுறையினரது இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும்.

சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றியதாலோ அவர்கள் இட்ட சாபம் ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமாக 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள்.

நம்பிய நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தால் முன் ஜென்மத்தில் செய்தமைக்காக தற்போது ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது அல்லது பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருக்கலாம்.

வேலை செய்தபோது கூலி கொடுக்காமல் ஏமாற்றினாலோ அல்லது மற்றவர்கள் வேலையை பறித்த பாவமும் சேர்ந்து ராகு-கேதுவாக மாறி ஜீவனஸ்தானத்தில் அமர்ந்து தொழிலில் முன்னுக்கு வர முடியாமல் ராகு 4-ல் அல்லது 10ல், கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து தடுக்கின்றது.

சொத்துகளை ஏமாற்றிப் பறித்து பெற்ற தாயின் சாபத்தையும் முன் ஜென்மத்தில் அந்த அன்னை இட்ட கண்ணீர் ராகு கேது தோஷத்தை ஏற்படுத்துகிறது.

சரி ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது? யாரும் எப்போது வேண்டுமானாலும் தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாமா? இல்லை இதற்கு ஏதேனும் கால நேரம்உள்ளதா? என்பதை வரும் காலங்களில் காணலாம். நாளை பொதுவான நாம் அன்றாடம் கடைபிடிக்ககூடிய எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய சில எளிய பரிகாரங்களை காணலாம்.

ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன். Mobile: 9789013486

Leave a Reply