Tuesday, November 17
Shadow

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டர் – சாந்தனு, சீமான் கூட்டணி மீது எகிறும் எதிர்பார்ப்பு!

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டர் – சாந்தனு, சீமான் கூட்டணி மீது எகிறும் எதிர்பார்ப்பு!

சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த போஸ்டர், படம் குறித்த எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகரித்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அப்பா – மகன் உறவை மையமாக வைத்திருக்கிறது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களுடன் ஆக்‌ஷன், கிரைம் மற்றும் பரபரப்பான சம்பவங்களும் கதையில் இடம்பெறுகின்றன.

வெளியான மோஷன் போஸ்டரிலேயே படத்தின் கதைக்களம் குறித்த சில சுவாரஸ்யமான தடயங்கள் இடம்பெற்றுள்ளன. சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றம், பின்னணியில் தெரியும் மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியை நினைவூட்டும் வடிவமைப்பு என ஒவ்வொரு அம்சமும் படத்தின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பே பல கேள்விகளை எழுப்பும் நிலையில், இந்தக் கைதியின் வாழ்க்கைக்கும் அப்பா – மகன் உறவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ரசிகர்களிடையே தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சுசீந்திரன் ஏற்கனவே ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களில் குடும்ப உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் இணைத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர். அந்த வரிசையில், மீண்டும் அப்பா – மகன் உறவை மையமாக வைத்து விறுவிறுப்பான கதையை உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாக சாந்தனு பாக்யராஜ் – சுசீந்திரன் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் சாம் சி எஸ் இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளன. மதுரையின் வாழ்வியலை கதையின் பின்னணியாக கொண்டு, உணர்வுக்கும் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகிறது.

KRG Kannan Ravi Group தயாரிக்கும் 10வது திரைப்படம் என்ற சிறப்பும் இப்படத்திற்கு உள்ளது. தரமான கதைகளையும் வலுவான படைப்பாளிகளையும் மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ‘ஒரு கைதியின் டைரி’ உருவாகி வருகிறது.

படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த் கையில் வெளியான மோஷன் போஸ்டர் மூலம் கவனம் ஈர்த்துள்ள ‘ஒரு கைதியின் டைரி’, சாந்தனு – சீமான் கூட்டணியால் எந்த மாதிரியான கதையை சொல்லப் போகிறது என்பதே தற்போதைய முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Rajinikanth Releases Motion Poster of ‘Oru Kaithiyin Diary’ – High Expectations for Shanthanu and Seeman Collaboration!

Superstar Rajinikanth has released the motion poster of the film ‘Oru Kaithiyin Diary’, starring Shanthanu Bhagyaraj and Seeman. The poster was unveiled by Rajinikanth in the presence of the film’s team, instantly raising expectations for the project.

Directed by Suseenthiran, the film is produced by Kannan Ravi and Deepak Ravi under the banner of KRG Kannan Ravi Group. Shanthanu Bhagyaraj plays the protagonist, while Seeman appears in a pivotal role. The music is composed by Sam C S.

Set against the backdrop of Madurai, the film revolves around an emotional father–son relationship. Along with intense family sentiments, the story also includes action, crime, and gripping events.

The motion poster itself offers intriguing hints about the storyline. Seeman and Shanthanu’s looks, the Madurai temple towers in the background, and a design resembling a handwritten diary all add to the curiosity surrounding the film.

The very title ‘Oru Kaithiyin Diary’ raises several questions, and audiences are now eager to know the connection between the prisoner’s life and the father–son relationship.

Suseenthiran, known for blending family emotions with action in films like Naan Mahaan Alla and Pandianadu, returns once again with a gripping narrative centered on a father–son bond.

The collaboration of Shanthanu Bhagyaraj and Suseenthiran, Seeman’s key role, and Sam C S’s music have further heightened expectations. The film is set against the cultural backdrop of Madurai, focusing equally on emotion and action.

This project also marks the 10th production of KRG Kannan Ravi Group, which is known for backing strong stories and talented filmmakers. ‘Oru Kaithiyin Diary’ continues that legacy.

With the team planning to complete the shoot in a single schedule, fans are now eagerly waiting for further updates following the release of the motion poster.

Having already grabbed attention through Rajinikanth’s unveiling, ‘Oru Kaithiyin Diary’ has now become one of the most anticipated films, with audiences curious to see what story the Shanthanu–Seeman combination will bring to the screen.