Sunday, June 28
Shadow

ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரான குட்டு உடைந்தது

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் இது நாம் அறிந்த விஷயம் ஆனால் இவரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்து கொடுத்த ரகசியம் உங்களுக்கு பலருக்கு தெரியாது .ஆம் இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய முக்கிய படங்கள் அனைத்தும் ரீமேக் படங்கள் தான் அதே போல இவருக்கு மிக மோசமான தோல்விகளையும் ரீமேக் படங்கள் தான் அந்த படங்கள் வரிசையை பார்ப்போம் .

தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)

ஆகியவை இந்தியிலிருந்தும்,

போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)

ஆகியவை தெலுங்கில் இருந்தும்

பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)

ஆகியவை கன்னடத்தில் இருந்தும்

முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)

ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.

வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்கள் மட்டுமே..