Wednesday, February 21
Shadow

தனுஷ்க்கு சூப்பர்ஸ்டார் ரஜினி போட்ட கட்டளை

சமீபத்தில் வெளியான தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான கொடி படம் சமீபத்தில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி அதாவது அவர் மாமனார் படம் பார்த்தாராம் படத்தை பார்த்து தனுஷ்க்கு ஒரு அன்பு கட்டளை போட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் கொடி. இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் கண்டுகளித்துள்ளார். படம் பார்த்துவிட்டு தனுஷை பாராட்டிய ரஜினி, இனி இதுபோன்ற படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க சொன்னாராம்.

மேலும் துரை செந்தில்குமாருடன் இன்னொரு படத்தில் நீங்கள் நடிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டாராம். இதைதொடர்ந்து தனுஷும் துரை செந்தில்குமாரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார்.

Leave a Reply