
‘ராமாயணா’ படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியீடு – உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்திய இதிகாசம்!
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை உலகத் திரையரங்குகளுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டு செல்லும் முயற்சியில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், விரிவான திரை வடிவமைப்பு மற்றும் கதை சொல்லும் பாணி குறித்த எதிர்பார்ப்பை இந்த டிரெய்லர் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பாரம்பரியக் கதையை சர்வதேச ரசிகர்களுக்கும் புரியும் வகையில், நவீன திரைப்படத் தொழில்நுட்பத்துடன் வழங்குவதே இப்படத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இப்படம், இந்திய இதிகாசத்தை உலகத் தரத்திலான சினிமா அனுபவத்துடன் இணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியக் கலாசாரம், புராணப் பின்னணி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ள புதிய டிரெய்லர், படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் திரையில் உருவாக்கப்படவுள்ள உலகம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
மேலும், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படம், பார்வையாளர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் முதல் குடும்பத்தினர் வரை பல்வேறு தரப்பினரும் ரசிக்கும் வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசத்தைப் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பையும் இப்படம் உருவாக்கியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், இந்தியக் கதை சொல்லும் மரபை உலக சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான படைப்பாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘Ramayana’ Unveils New International Trailer, Building Global Buzz for the Epic Indian Saga
The new international trailer of Ramayana, an ambitious cinematic adaptation of one of India’s most revered epics, has been released, raising anticipation among audiences worldwide. Offering a glimpse into the film’s grand visual presentation, expansive cinematic world and storytelling approach, the trailer has further heightened curiosity about the upcoming film.
Produced by Namit Malhotra, Ramayana aims to bring India’s timeless storytelling heritage to a global audience through a blend of traditional mythology and modern filmmaking technology. The film seeks to present the legendary Indian epic on a scale comparable to some of the world’s most ambitious cinematic productions.
Rooted in Indian culture and mythology, the film places a strong emphasis on large-scale visuals and immersive storytelling. With the release of its new international trailer, the makers are offering audiences a closer look at the cinematic world being created for this much-anticipated project.
The film is also expected to deliver an immersive theatrical experience with its 3D release. By presenting the legendary epic through contemporary cinematic techniques, Ramayana aims to connect with audiences across generations, including children and families, while introducing India’s rich storytelling traditions to a wider international audience.
Scheduled for release on November 5, coinciding with the Diwali festive season, Ramayana is generating growing anticipation as a major cinematic endeavour that seeks to bring one of India’s most enduring stories to the global stage.
