Thursday, May 30
Shadow

ராவண கோட்டம் – திரை விமர்சனம் Rank 3/5

ராவண கோட்டம் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கிய படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

விக்ரம் சுகுமார் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் கயல் ஆனந்தி கண்ணன் ரவி பிரபு இளவரசு தீபா தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ராவணக்கோட்டம்

தமிழ் சினிமாவில் வந்த பல ஜாதி சண்டை படங்களில் இதுவும் ஒரு படம் என்று கூறலாம். இருந்தும் மற்ற படங்களில் இருந்து இந்த படம் எப்படி வேறுபட்டு இருக்கிறது என்று பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாறு என்ற கிராமம் இந்த கிராமத்தை சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் இதுதான் தலைமையிடம் இந்த கிராமத்து மக்கள் பழக்க வழக்கம் தான் மற்ற கிராமங்களும் கடைபிடிக்கும் அதன்படி இந்த கிராமத்தை ஊர் தலைவர் பிரபு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் ஜாதி சண்டை போன்ற எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறார் அரசியல்வாதிகள் உள்ளே வந்தால் ஜாதி சண்டை வந்துவிடும் என்பதில் மிகவும் மிகவும் கவனமாக இருக்கிறார். அதையும் மீறி இந்த கிராமத்துக்குள் அரசியல்வாதிகள் எப்படி உள்ளே புகுகிறார்கள் எப்படி ஜாதி கலவரம் வருகிறது இது எப்படி இதற்கு என்ன தீர்வு என்பது தான் இந்த படத்தின் கதை களம்

ஏனோ ஒரு கிராமத்தில் மேலத் தெருவில் மேல் ஜாதி மக்களும் கீழத்தெருவில் கீழ் ஜாதி மக்கள் வசிக்கின்றனர் ஆனால் ஊர் தலைவர் பிரபு இரண்டு பேருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடுகள் இல்லாமல் அவர்கள் தேவையை மிகவும் அழகாக பூர்த்தி செய்து வந்து கொண்டிருக்கிறார். ஏன் ஒரு கிராமத்தின் திரு கோவில் திருவிழாவான முளைக்கட்டு நடைபெற இருக்கிறது இந்த முளைக்கட்டு விழாவில் எந்தவிதமான கலரும் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் அதையும் மீறி ஒரு அரசியல்வாதி இந்த ஊருக்குள் நுழைகிறார் இந்த அரசியல்வாதிகள் ஊருக்குள் ஏற்படும் பிரச்சனைகள் மிகவும் ஒற்றுமையாக இருந்த கீழத் தெரு மேல தெரு இந்த இருவருக்கும் சண்டை மூட்டி விட்டு இதனால் ஏற்படும் கலவரம் தான் இந்த படத்தின் கதை இந்த கலவரத்தை எப்படி கையாண்டார் படத்தின் நாயகன் சாந்தனு என்பதை திரையில் கண்டு களியுங்கள்

சாந்தனு பாக்யராஜ் தன் நடிப்பை இந்த படத்தில் மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று சொன்னால் மிக ஆகாது காட்சிக்கு காட்சி இயக்குனரின் என்ன மருந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஏன் வாழ்ந்து இருக்கிறார் என்று கூட சொல்லலாம் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளும் சரி காதல் காட்சிகளும் சரி அதேபோல் கண்ணன் ரவியுடன் நட்பு செலுத்தும் காட்சிகளும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் நாயகியாக கயல் ஆனந்தி இவருக்கென்று பெரிதாக வேலை இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்

படத்தின் வில்லனாக கண்ணன் ரவி இந்த படத்தை தயாரித்து வில்லனாகவும் நடித்திருக்கிறார் அறிமுகப்படம் ராவணக்கோட்டம் இவரை தமிழ் சினிமாக்கு ஒரு நல்ல வில்லன் நடிகர் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
தன் முதல் படத்திலே தான் ஒரு மிக சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறார் வில்லத்தனம் மட்டும் இல்லாமல் ஜனஜமான காட்சிகளிலும் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்

மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் தன் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று கூற வேண்டும் குறிப்பாக அருள்தாஸ் தயாரிப்பாளர் தேனப்பன் பிரபு இளவரசு இவர்கள் நடிப்பு மிகவும் பாராட்டு கூறியதாக உள்ளது.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இவரிடம் இருந்து நாம் எதிர்பார்த்தது மிக அதிகம் ஆனால் நமக்கு கிடைத்தது சற்று குறைவு என்று தான் சொல்ல வேண்டும் இவரின் மதயானைக்கூட்டத்து படத்தோடு ஒப்பிடும்போது ராவணக்கோட்டம் கொஞ்சம் சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும் திரைக்கதையில் கூடுதல் கொஞ்சம் கவனம் செலுத்து இருந்தால் நிச்சயம் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும் தயாரிப்பு தயாரிப்பு தரப்பில் பல குளறுபடிகள் இருந்தாலும் கொரோனா போன்ற இரு தடங்கல்கள் வந்து இருந்தாலும் கதையிலும் திரைகதிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் அதற்காக மோசமான படம் என்று சொல்லும் படியான படமாகவும் இல்லை திரையரங்குக்குள் செல்லுபவர்களுக்கு ரசிக்கும் ஒரு முறை பார்த்து ரசிக்க கூடிய படமாக தான் அமைந்துள்ளது .

மொத்தத்தில் ராவண கோட்டம் கொடி பறக்க வில்லை