
ரத்தப்புயலில் ராயாவின் கால் பதிப்பு – பிப்ரவரி 20க்கு ‘டாக்ஸிக்’ உலகம் திறக்கிறது!
இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முன்னிலையில் திகழும் , அதன் டீசர் வெளியீட்டை மெருகூட்டிய புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் இந்த டீசர், ரசிகர்களை ஒரு இருண்ட, வன்முறை கலந்த பிரபஞ்சத்தின் வாசற்படியில் நிறுத்துகிறது.
புதிய போஸ்டர் வெறும் அறிவிப்பு அல்ல; அது ஒரு மனநிலையின் அறிமுகம். பனிப்புயலைப் போன்ற ரத்தச் சிதறல்களில் நடுவே நிற்கும் ராயா – அதாவது – முகம் தெளிவாக தெரியாத நிலையில் நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் காட்சி, வன்முறையின் பிந்தைய அமைதியை உணர்த்துகிறது. தரையில் சிதைந்த சுவடுகள், கண்களுக்கு எட்டாத சண்டையின் சாட்சிகள்… இந்த உலகம் சாதாரணமல்ல என்பதை அந்த ஒரு காட்சி சொல்லிவிடுகிறது.
எதிர்பார்ப்பை உச்சிக்கு கொண்டு சென்ற மார்க்கெட்டிங்
கதையின் முழு விவரங்களை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய உத்தி, ‘டாக்ஸிக்’ மீதான ஆர்வத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. டீசர் ஒரே மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்சிகளின் தாக்கமே நேரடியாக பேசும் – மொழி தடையில்லாமல்.
வலிமையான நட்சத்திர அணிவகுப்பு
- – உணர்ச்சி நிறைந்த நாடியா
- – ஆபத்தும் அதிகாரமும் கலந்த எலிசபெத்
- – சக்தி சமன்பாட்டை மாற்றும் கங்கா
- – புரிந்து கொள்ள முடியாத ரெபெக்கா
- – கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சியைக் காட்டும் மெலிசா
இவற்றின் முடிவாக, “Daddy’s home…” என்ற வசனத்துடன் ராயாவின் வருகை அறிவிக்கப்பட்டது. அது கதைக்குள் மட்டுமல்ல, திரையரங்குகளுக்குள் யாஷின் மீள்வரவும் ஆகும்.
உலகளாவிய கனவுடன் உருவான படைப்பு
இயக்கத்தில், யாஷுடன் இணைந்து எழுதப்பட்ட இப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருப்பது அதன் உலகளாவிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவில் தேசிய விருது பெற்ற , இசையில் , எடிட்டிங்கில் , தயாரிப்பு வடிவமைப்பில் ஆகியோர் இணைந்துள்ளனர்.
அதிரடி காட்சிகளை ஹாலிவுட் இயக்குநர் ( புகழ்) வடிவமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற அதிரடி இயக்குநர்கள் மற்றும் இணைந்து காட்சிகளை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர்.
வெளியீட்டு தேதி
மற்றும் தயாரிப்பில் உருவான ‘டாக்ஸிக்’, ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளை ஒட்டி, மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிப்ரவரி 20 – ராயாவின் உலகம் திறக்கும் நாள்.
ஒரு டீசர் மட்டுமல்ல… ஒரு இருண்ட காவியத்தின் முதல் சுவடு.

Raya Steps Into the Bloodstorm – ‘Toxic’ World Opens on February 20!
One of India’s most anticipated films, , has officially announced its teaser release with a striking new poster. The teaser will drop on February 20 at 9:35 AM, offering audiences a doorway into a dark universe shaped by violence and moral ambiguity.
The newly unveiled poster is more than just an announcement — it sets the tone. At the center stands Raya, played by , positioned amidst what appears to be a blood-streaked blizzard. With his face partially obscured and drinking straight from a bottle, he stands on a blood-soaked ground surrounded by the aftermath of unseen destruction. The image alone signals that this is no ordinary cinematic world.
A Marketing Strategy That Heightened Anticipation
By revealing characters in phases and withholding key narrative details, the makers have significantly amplified curiosity around the film. The teaser will be released in a single language to preserve its raw narrative impact, allowing the film’s stark imagery and atmosphere to speak directly to audiences beyond linguistic boundaries.
A Powerful Ensemble Cast
- as the emotionally layered Nadia
- as the commanding and lethal Elizabeth
- as Ganga, a character who shifts the power dynamics
- as the enigmatic Rebecca
- as Mellisa, radiating controlled authority
The final reveal introduced Yash as Raya, with the line “Daddy’s home…” serving not only as his arrival within the story but also as a bold statement marking his return to theatres.
A Film with Global Ambition
Directed by and co-written by Yash and Geetu Mohandas, the film has been simultaneously shot in Kannada and English. It will also be dubbed in Tamil, Telugu, Malayalam, Hindi, and several other languages — underscoring its global vision.
The technical team includes National Award-winning cinematographer , music composer , editor , and production designer .
The action sequences are mounted on a grand scale, choreographed by Hollywood action director (known for ), alongside National Award-winning stunt directors and .
Produced by and , Toxic is slated for a worldwide theatrical release on March 19, 2026, strategically aligned with major festive celebrations.
February 20 marks the opening of Raya’s world —
not just a teaser release, but the first glimpse into a dark cinematic saga.
