Saturday, December 14
Shadow

வசூலில் சாதனை படைக்கும் இருமுகன்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இதில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் படம் பாசிடிவ் விமர்சனத்தையே பெற்றுள்ளது.

ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் பைசா வசூல் என்றும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 65 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 29.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் சக்சஸ்மீட் (வெற்றி சந்திப்பு)நேற்று முன் தினம் நடந்தது இதில் விகரம் தயாரிப்பாளர் ஷிபு தமீம் படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் படத்தின் எடிட்டர் கலை இயக்குனர் இசையமைப்பாளர்ம ஹாரிஸ் ஜெயராஜ் படத்தை தமிழ்கம்முழுதும் வெளியிட்ட ஆரா பிலிம்ஸ் மகேஷ் கலந்து கொண்டனர் இதில் பேசிய விக்ரம் இயக்குனர் ஆனந்த் ஷங்கரிடம் வேலை செய்தது இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்தினம் கிட்ட வேலை செய்த அனுபவம் போல இருந்தது தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனையை புரியும் இந்த படம் ஆரம்பிக்கும் போது நான் பல பிரச்சனையில் மாட்டி கொண்டு இருந்தேன் அப்ப இந்த படம் என்னால் தயாரிக்க முடியுமா என்று தவித்த போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்பவே சொல்லி விட்டார் ஷிபு உங்கள் கவலை எல்லாம் போய் இந்த படம் மூலம் மிகபெரிய லாபம் சம்பாதிங்க என்று அவர் சொன்னது இன்று நடந்து அதற்கு காரணம் இந்த படத்தின் கதை என்றும் படத்தில் வேலை செய்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply