பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் ரம்யா ந்பீசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
அண்மையில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ், ரியோ ராஜ் நடிப்பில் புதிய படம் ஒன்று தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இந்த பூஜையில் படத்தில் நடிக்கும் மற்றும் பணியாற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்
இந்த படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் தெரிவிக்கையில், மழைகால சீசனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று மழை காலத்தில் ஷூட்டிங் நடத்துவது இந்தியாவில் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்றாகும். இது எனக்கும் மிக நல்ல துவக்கமாகவும், வெற்றி படமாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார்.
இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, இந்த படத்தில் முனீஸ்காந்த், ரோபோ சங்கர், பாலா சரவணன், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேகா, சந்தன பாரதி, லிவ்ங்க்ஸ்டன், எம்எஸ் பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் சில பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, கேரளா மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த படத்தை பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக ராஜேஷ் குமார் மற்றும் எல் சிந்தன் ஆகியோர் தயாரிக்க உள்ளனர். இது தவிர இந்த படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவிலை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப பிரிவில் ஏசி கருணாமூர்த்தி கதை எழுத, பி ராஜசேகர் போட்டோகிராபி டைரக்டராகவும், சாம் ஆர்டிஎக்ஸ் எடிட்டிங் பணிகளையும், ஆர்கே டயலாக் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்க, கலை பணிகளை சரவணன் மேற்கொள்ள உள்ளார்.