Monday, July 6
Shadow

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் டீம் படத்தின் டப்பிங் ஆரம்பம்

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவா நடிச்ச, ரியோராஜ். அடுத்து, பத்ரி வெங்கடேஷ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார். படத்துக்கு, ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் ‘“படத்தின் கதைப்படி, ரியோராஜ் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார். ரம்யா நம்பீசன், அதே நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். இருவரும் சென்னையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார்கள்., அவர்களின் பயணம் ஏன், எதற்காக என்பது படத்தின் ‘சஸ்பென்ஸ்’


இது, ஒரு முழு நீள நகைச்சுவை படம். எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, பாலசரவணன், மாரிமுத்து, ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன், ரேகா, விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். ராஜேஷ்குமார், எல்.சிந்தன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தின் டப்பிங் இன்னிக்கு ஆரம்பிடுச்சு என்றார்