Sunday, February 25
Shadow

S3 மிரட்டல் டீசர் நேரம் தெரியுமா ?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா பங்கேற்ற சண்டைகாட்சி படமாகி வந்தது. அண்மையில் இந்த ஷெட்யூல் முடிந்துள்ளது.

மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் மொத்தம் 1 நிமிடம் 16 நொடிகள் ஓடுமாம்.

Leave a Reply