Thursday, October 22
Shadow

சைக்கோ திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)


படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே இளம் பெண்ணொருவர் மர்ம நபரால் கொல்லப்படுகிறார். இந்தக் கொலையை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது. இதையடுத்து உதவிக்கு ஃபோரன்சிக் டிபார்ட்மெண்டை சேர்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோவை போலீஸ் அழைக்கிறது. அவர் போலீஸ் அதிகாரியான விஷ்ணு பிரியாவுடன் சேர்ந்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தின் கதை.

மர்டர் மிஸ்டரி வகை படங்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட ஒரே கதைதான் என்றாலும் இதை கையாண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும் அயர்ச்சி ஏற்படாதவகையில் இருந்து ஓரளவு திரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக, இதுவரை தமிழ் படங்களில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத, காட்டப்படாத ஃபோரன் சிக் டிபார்ட்மெண்ட், ஒரு கொலையை கண்டுபிடிக்க எந்த அளவு உதவி புரிகிறது, ஒவ்வொரு கேஸிலும் அவர்களின் பங்கு எந்த அளவு இருக்கிறது என்பதை மையமாக எடுத்து, அதை சுவாரஸ்யம் குறையாமல் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பாவல் நவகீதன்.

குற்றம் கடிதல், மகளிர் மட்டும் என நடிப்பில் நம்மை கவர்ந்த பாவல் நவகீதன், இயக்குனராகவும் தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளார். விசாரணையை ஃபோரன்சிக் டிபார்ட்மெண்ட் எப்படி கையாளும், குறிப்பாக ஒவ்வொருடைய அசைவுகள் மூலம் கூட எப்படி துப்பறிவது என ஃப்ரெஷ்ஷான காட்சிகள் கவர்கின்றன. எந்த இடத்திலும் அதிகம் மிகைப்படுத்தாத காட்சியமைப்பு, தெளிவான, குறைவான வசனங்கள் என ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர்.

ஆரம்பத்தில் துடுக்காகவும் போகப் போக விவேகமான, புத்திசாலித்தனமான போலீசாகவும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் நாயகன் ராம் அருண் கேஸ்ட்ரோ. இரவை கண்டால் பயம் ஏற்படும் நோயோடு இவர் பயணிக்கும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளை நிறைவாக செய்துள்ளார். இவருடன் படம் முழுவதும் பயணிக்கும் போலீஸ் அதிகாரியும், நாயகியுமான விஷ்ணு பிரியா பங்கிலும் எந்தக் குறையுமில்லை. போலீசுக்குத் தேவையான மிடுக்கான தோற்றத்துடன் காணப்படும் இவர் தமிழ் உச்சரிப்பில் மட்டும் சற்று கவனமாக இருந்திருக்கலாம். கொலை செய்யப்படும் ‘பேரழகி’ காயத்திரி, லிங்கேஷ், மைம் கோபி, லிஜீஷ் இன்னும் சில புதுமுக நடிகர்கள் ஆகியோர் அவரவர் பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு நல்ல திரில்லர் படத்திற்கு மிக முக்கியம் நேர்த்தியான ஒளிப்பதிவும், இசையும். அந்த வகையில் கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவும், ரோனி ராபல் இசையும் படத்திற்கு உதவியுள்ளன.

நிக்டோஃபோபியாவால் பாதிக்கப்பட்ட நாயகன், ஃபோரென்சிக் டிபார்ட்மெண்ட்டின் செயல்பாடுகள் என ஃப்ரெஷ்ஷான விஷயங்களை கொடுத்த இயக்குனர், கிளைமாக்ஸில் கொலையாளியாகவும் கொலைக்கான காரணமாகவும் சொல்லப்படும் விஷயத்தையும் புதிதாக அமைத்திருக்கலாம். நிக்டோஃபோபியாவால் பாதிக்கப்பட்ட நாயகன், விசாரணை பயணத்தில் அதனால் பெரிய சவால்களை எதிர்கொள்ளாததும் கதைக்களம் ஒரு சிறிய வட்டத்துக்குள் நிகழ்வதும் சில ‘ஜஸ்ட் மிஸ்’கள்.