Thursday, May 23
Shadow

சைத்தான் பட காட்சியை ரிலீஸுக்கு முன்பே வெளியிடும் விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.

இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் நவம்பர் 3-ம் தேதி வெளியாகிறது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சியை வெளியிடுகிறதாம் படக்குழு. இப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply